மணிரத்னத்திற்கு டேக்கா கொடுக்கும் கமல்!... அஜித் பட இயக்குனருக்குத்தான் அடுத்த படம்… ஏன் இப்படி?

by Arun Prasad |
ManiRatnam
X

ManiRatnam

கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஒரு விபத்து காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. அந்த விபத்தில் மூன்று டெக்னீசியன்கள் பலியானார்கள்.

Indian 2

Indian 2

அதன் பின் கொரோனா கட்டுப்பாடு தொடங்கியவுடன் இத்திரைப்படம் அப்படியே முடங்கிவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் இறந்துப்போனதால் இக்கதாப்பாத்திரத்தில் வேறு இரண்டு நடிகர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக் கமலுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான். ஆனால் துர்திஷ்டவசமாக விவேக் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

Mani Ratnam

Mani Ratnam

“இந்தியன் 2” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் திரைப்படத்தில் இணைவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது “இந்தியன் 2” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ஹெச்.வினோத்துடன் இணையவுள்ளாராம். அதன்பிறகு மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

H.Vinoth

H.Vinoth

“இந்தியன் 2” திரைப்படத்திற்கு பிறகு ஒரு மாதம் அமெரிக்காவில் ஓய்வு எடுக்கப்போகிறாராம் கமல்ஹாசன். அதன்பிறகு ஹெச்.வினோத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.

ஏற்கனவே பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ளார்கள் என தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஹெச்.வினோத்துடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெற்றிமாறனை இனி யாருக்கும் பிடிக்காமல் போகலாம்- ஜெய் பீம் நடிகர் ஓப்பன் டாக்…

Next Story