விஜய்க்கு கொக்கிப் போட நினைத்த கமல்… நைசாக நழுவி எஸ்கேப் ஆன தளபதி… என்னவா இருக்கும்!!
விஜய் நடிக்கும் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக காஷ்மீருக்கு பயணிக்கின்றனர். “தளபதி 67” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்ற செய்தி பலரும் அறிந்ததே. இத்திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் “தளபதி 67” லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் (LCU) வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆதலால் இத்திரைப்படத்தில் நிச்சயமாக கமல்ஹாசன் ஒரு கேமியோ ரோலில் இடம்பெறுகிறார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால் தற்போது கமல்ஹாசன் “தளபதி 67” திரைப்படத்தில் நடிப்பது குறித்தான ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 67” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க மறுத்துவிட்டாராம்.
கமல்ஹாசன் நடிக்க மறுத்ததற்கான காரணமாக ஒன்று கூறப்படுகிறது. அதாவது கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பேன்னரில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம். இதற்கான முயற்சியாகத்தான் “தளபதி 67” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக முடிவெடுத்தாராம்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் பேசிய முதல் பஞ்ச் வசனம் இதுதான்… சும்மா அதுருதுல!!
இது குறித்து அணுகியபோது, கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டாராம். இதன் காரணமாகத்தான் கமல்ஹாசன் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக ஒரு தகவல் வெளிவருகிறது.