4 மாசம் ஆனாலும் பரவாயில்லை.. அந்த நடிகைதான் வேண்டும்!.. இயக்குனரிடம் சண்டை போட்ட கமல்!..

kamalhaasan
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சிவாஜி கணேசனே ஒரு பேட்டியில் இதை கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புது புது கதைகளை தொடர்ந்து முயற்சித்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். தசவதாரம், ஆளவந்தான் போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். எந்த ஒரு நடிகருடனும் எந்த விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க கூடியவர் கமல்ஹாசன்.

kamalhaasan
மூன்றாம் பிறை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா 1990களில் கமல்ஹாசனை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார். இதுக்குறித்து கமல்ஹாசனிடம் கூறும்போது அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு காமெடி கதாபாத்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரம் பிடித்து போகவே கமல்ஹாசனும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கமல்ஹாசனுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என யோசிக்கும்போது அப்போதுதான் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நட்சத்திரமாக கோவை சரளா இருந்தார். பொதுவாக இந்த மாதிரியான பெரிய ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக சின்ன நட்சத்திரங்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் கமல், கோவை சரளாதான் அந்த பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என நினைத்தார்.
கோவை சரளாவிற்கு கிடைத்த வாய்ப்பு:
இதனையடுத்து கோவை சரளாவிற்கு போன் செய்து பாலு மகேந்திரா விவரங்களை கூறினார். முதலில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறோம் என்பதை கோவை சரளாவால் நம்பவே முடியவில்லை. ஆனால் பிறகு கமலே போன் செய்து சொன்ன பிறகுதான் அவர் நம்பினார்.

kovai sarala
அப்போது ஏற்கனவே கோவை சரளா பல படங்களில் கமிட் ஆகி இருந்ததால் 4 மாதங்களுக்கு அவருக்கு கால் ஷூட் இல்லை. நான்கு மாதங்களுக்கு பிறகே நடித்துக்கொடுக்க முடியும் என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை கேட்ட பாலு மகேந்திரா “சரி வேறு ஒரு நட்சட்த்திரத்தை வைத்து படத்தை எடுத்துக்கொள்ளலாம்” என நினைத்தார். ஆனால் கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 4 மாதம் காத்திருந்தாலும் பரவாயில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு கோவை சரளாதான் சரியாக இருப்பார்கள் என கூறி காத்திருந்து நடித்தார் கமல்ஹாசன்.

sathi leelavathi poster
ஒரு பெரும் கதாநாயகன் காமெடி நடிகைக்காக 4 மாதங்கள் காத்திருந்து நடித்த நிகழ்வை தமிழ் சினிமாவில் கமல் மட்டுமே செய்திருக்க முடியும். அப்படி உருவாகி 1995 இல் வெளியாகிய வெற்றி படம்தான் சதி லீலாவதி திரைப்படம்.
அந்த படத்தை பார்த்த பிறகு கமல்ஹாசன் ஏன் கோவை சரளாவை நடிக்க வைக்க பிடிவாதம் பிடித்தார் என்பதை பாலு மகேந்திரா புரிந்துக்கொண்டார்.