More
Categories: Cinema News latest news

ஒரே வருடத்தில் மூணா? வேற லெவல் ஆட்டமால இருக்கு.. உலகநாயகன் ஜெட் ஸ்பீடில் இருக்காருப்பா…

Kamalhassan: தமிழ் சினிமாவில் தற்போது இள நடிகர்களை விட முன்னணி நடிகர்களாக இருக்கும் அனுபவம் வாய்ந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் செம ஸ்பீடாக இயங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் கமலின் பிளானை கேட்டு ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். அதைத்தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தனக்கென ஒரு அங்கீகாரத்தை கோலிவுட்டில் உருவாக்கி விட்டார். நிறைய டெக்னாலஜி விஷயங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். விஸ்வரூபம் படத்துக்கு பின்னர் அவருக்கு நல்ல படங்கள் கிடைக்காமல் இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: பி.வாசுவுக்காக முதன் முதலில் அந்த காரியத்தை செய்த ஜெயலலிதா! இப்படிலாம் நடந்திருக்கா?

அந்த குறையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நிவர்த்தி செய்தது. படம் மிகப்பெரிய ஹிட்டானது. மீண்டும் கேரியரில் கமல் உயர்ந்தார். தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பிஸியாகி இருக்கிறார். அடுத்தடுத்த படங்களும் புக்காகி இருக்கிறது.

வரும் ஜூன் மாதத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. பல வருடமாக ஷூட்டிங் நடந்து வரும் இப்படம் பலரது எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படமும் இந்த வருடத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் படம் மிஸ்ஸாச்சு… தளபதி படத்தில் துண்டு போட்ட பிரபல ஹீரோ… நீங்க வெவரம் தான் சாமி…

இப்படத்தில் கமலுடன் நடிகர் சிம்புவும் முக்கியவே இடத்தில் நடிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பது தற்போதைய பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பிரபாஸ் நடிப்பில் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் கல்கி 2898ஏடி இந்த வருட இறுதிக்குள் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

முதலில் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ஒரு சிறப்பு தோற்றம் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய இடைவேளைக்கு பின்னர் ஒரே வருடத்தில் மூன்று திரைப்படங்களை கமல்ஹாசன் வெளியிட இருப்பதால் அவர் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு முதல் பகுதியில் பெரிய அளவில் தமிழ் படங்கள் வசூலை குவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பகுதியில் நிறைய பெரிய ஸ்டார்களின் படங்கள் அந்த குறையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Published by
Akhilan

Recent Posts