இத்தனை கெட்டப்பில் டெஸ்ட் ஷூட் நடந்ததா? ‘இந்தியன்’ தாத்தாவையும் மிஞ்சிய கெட்டப்கள்.. இதோ பாருங்க

by Rohini |
kamal
X

kamal

Actor Kamal: இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் இவரை மிஞ்சிய நடிகர் வேறு யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு சினிமாவில் சிவாஜியின் அடுத்த வாரிசாக வலம் வருபவர் கமல்.

உலக நாயகன் என அனைவராலும் போற்றப்படுபவர். சினிமாவைப் பற்றி இவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. சினிமாவில் இருக்கும் அத்தனை துறைகளும் இவருக்கு அத்துப்பிடி. அந்த அளவுக்கு எல்லா துறைகளிலும் இருக்கும் நுணுக்கங்களை நன்கு கற்று அறிந்தவர் கமல்.

இதையும் படங்கள்: சிவாஜி கூட நடிக்க மாட்டேன்!. தெறித்து ஓடிய கார்த்திக்!.. அவர் சொன்ன காரணம் இதுதான்!..

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் ஏதாவது ஒரு புத்தகம் நாவலை பற்றி கேட்டாலும் அதையும் தன் விரல் நுனியில் நன்கு தெரிந்து வைத்திருப்பவர். நடிப்பில் ஒரு என்சைக்ளோபீடியா என்றே கமலை கூறலாம். ஜூலை 12ஆம் தேதி இவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.

அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் கமலுடன் இணைந்து ஒட்டுமொத்த பட குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் தான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதன் பிறகு ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியனுக்கும் வேட்டையனுக்கும் நடந்த ஸ்பெஷல் மீட்டிங்!.. வைரல் போட்டோ பாருங்க!..

அந்த அளவுக்கு ட்ரெய்லர் மிகப் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. கெட்டப் மன்னன் என்று கமலை சொல்லலாம். படத்துக்காக எத்தனை கெட்டப் என்ன மாதிரியான கெட்டப் போடச் சொன்னாலும் தயங்காமல் எவ்வளவு மணி நேரம் ஆனாலும் காத்திருந்து தன்னை தயார்படுத்தி கொள்வார்.

kamal1

kamal1

இந்த நிலையில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக அற்புதமாக மிரட்டி இருப்பார் கமல். ஆனால் அந்த படத்திற்காக நடந்த டெஸ்ட் சூட் புகைப்படங்களில் பார்க்கும்போது அதில் இருக்கும் கெட்டப்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அந்த புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: விஜயகாந்தை பெல்ட்டால் அடித்தேன்!… பல வருடங்கள் கழித்து சொன்ன அந்த நடிகர்!…

Next Story