சூர்யாவுடன் ஒப்பிட்டு விஜயை மட்டம் தட்டி பேசினாரா? டிவிட்டர் பதிவால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து அரசியலில் சாதிக்க துடிக்கும் எத்தனையோ பிரபலங்கள் உள்ளனர் . ஏன் இதற்கு முன்பு கூட ஏகப்பட்ட பிரபலங்கள் அரசியலில் குதித்து வெற்றி தோல்விகளை பார்த்து இப்போது அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கோலிவுட்டில் வசூல் மன்னனாக திகழும் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் குறித்து தன்னுடைய செயல்பாடுகளை தனது மக்கள் இயக்கம் சார்பாக நடத்திக் கொண்டும் வருகிறார். அதனுடைய விளைவு தான் சமீபத்தில் நடந்த மதிய விருந்து திட்டம். அதில் ஏராளமானோர் பயனடைந்தனர். அந்த வகையில் ஜூன் 17ஆம் தேதி கூட பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்க இருக்கிறார் விஜய்.
தொகுதி வாரியாக பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசினையும் ஊக்க தொகையையும் கொடுத்து விஜய் கௌரவப்படுத்த உள்ளார் .இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று அவருடைய மேலாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கமல் ரசிகர்கள் என்ற பெயரில் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது "வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து கௌரவப்படுத்த உள்ளார். ஆனால் பள்ளிக்கே செல்லாத மாணவர்களை தேடி பிடித்து பல ஆண்டுகளாக அவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தம்பி சூர்யா" என பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த கமல் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஏனெனில் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல் எப்படி இந்த மாதிரியான ஒரு எண்ணத்தில் இருப்பார். அதுவும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யாவை ஒப்பிட்டு ஒரு தவறான கருத்தை முன்வைப்பாரா? இது கமல் மீது அதுவும் கமல் ரசிகர்கள் ஃபேன் பேஜில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கின்றது. மேலும் கமல் மேல் ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதற்காகவே இப்படி ஒரு செய்தியை பரப்பி வருகின்றனர் என்று சிலர் கமெண்ட்கள் மூலம் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே கதையில் வெளியான மூன்று படங்கள்! – அட எல்லாமே ஹிட்டு!…