Categories: latest news

கமலுக்கு செல்ல வேண்டிய படத்தை ஆட்டைய போட்ட முன்னணி நடிகர்…. செம வெவரம்தான்!..

Kamalhassan: தமிழ் சினிமா இயக்குனர்கள் சில கதைகளை குறிப்பிட்ட நடிகர்களுக்காக தான் எழுதுவார்கள். கடைசியில் நடுவில் வரும் ஒரு நடிகர் கதை பிடித்து போய் அதை தட்டி சென்றுவிடுவார்கள். கமல் விஷயத்தில் அப்படி ஒரு சம்பவமும் தற்போது நடந்து இருக்கிறது.

புதுக்கதைகளை முயற்சி செய்து பார்ப்பதில் வித்தகர் கமல்ஹாசன் தான். அவரின் படங்களில் புதுமை என்னைக்குமே மிஸ் ஆகவே ஆகாது. அதனாலே இயக்குனர்களும் வித்தியாசமான கதைக்கு கமல்ஹாசனிடமே போய் நிற்பார்கள். அப்படி ஒரு கதையாக உருவானது தான் ஜீனி திரைப்படம்.

இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..

ஃபாண்டசி படமான இப்படத்தினை முதலில்  கமல்ஹாசனுக்காக தான் அப்படத்தின் இயக்குனர் அர்ஜூனன் எழுதி இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த கதையை கேட்ட ஜெயம் ரவி, கொஞ்சமும் யோசிக்காமல் நான் தான் உங்கள் ஜீனி எனக் கூறிவிட்டாராம். அதை தொடர்ந்து கமல்ஹாசனிடம் இந்த கதையை சொல்ல முடியாமல் போக ஜெயம் ரவியே நடிக்க முடிவானது.

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் வன்முறை, ரத்தம், போதை, கடத்தல் என்ற எந்த விஷயமும் இல்லாத ப்ரெஷ் படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தினை வேல் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அகிலன், இறைவன், சைரன் என எல்லா படங்களுமே வசூலில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…

இதை கருத்தில் கொண்டு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறார் ரவி. அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை, பிரதர் படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளும் தொடங்க இருக்கிறது. தக் லைஃப் படத்தில் இருந்து விலகி இருக்கும் ரவி அடுத்தடுத்து சில படங்களையும் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

43 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

1 hour ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago