கமலுக்கு கதையே பிடிக்கல! ஆனாலும் நடிச்சி ஹிட் கொடுத்தார்!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே இயக்குனர்!

kamal
Actor Kamal: தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் பெரும் சாதனை படைத்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் என அனைவருக்கும் தெரியும். சினிமாவை பற்றிய எல்லா விஷயங்களையும் நன்கு அறிந்தவர். புதிய புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு கொண்டு போக வேண்டும் என விரும்புபவர்.
எத்தனையோ கதாபாத்திரங்கள், விதவிதமான கெட்டப்கள் என எப்போதுமே ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதில் ஒரு சிறந்த நடிகராக கமல் இருந்து வருகிறார். அவர் நடித்து எத்தனையோ படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அதில் அவர் விருப்பமில்லாமல் நடித்து அந்த படமும் வெற்றி வாகை சூடியிருக்கின்றன.
இதையும் படிங்க: நடிகைக்கு போய் பிடிச்சிடுச்சா?!. படப்பிடிப்புக்கு பயந்து கொண்டே போன பாக்கியராஜ்!.. திக் திக் பிளாஷ்பேக்!..
கமல் ,குஷ்பூ ஆகியோர் நடிப்பில் முழு நேர காமெடி படமாக வெளியானதுதான் சிங்காரவேலன் திரைப்படம். இந்தப் படத்தை ஆர்.வி. உதயகுமார் இயக்க படத்திற்கு இசை இளையராஜா. இந்தப் படத்தில் கமல் முதலில் விருப்பமில்லாமல்தான் நடித்தார் என ஆர்.வி.உதயகுமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Singaravelan
ஆனால் இந்தளவு வெற்றிபெற்று ஒரு பெரும் சாதனை படைக்கும் என நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றும் உதயகுமார் அந்த பேட்டியில் கூறினார். அதுமட்டுமில்லாமல் சிவாஜிக்காக ஒரு கதைய எழுதி சிவாஜியிடம் போய் கொடுத்தாராம் உதயகுமார். கதை நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என்னால் நடிக்க முடியாது.
இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..
கமல் என்ற ஒரு பையன் இருக்கிறான். அவன் என்னையும் மீறி மிகவும் ஸ்டைலிஷான ஆக்டராக இருக்கிறான். அவனிடம் வேண்டுமானால் போய் கேள் என்று சொன்னதாக உதயகுமார் கூறினார். சிவாஜியையே ஆச்சரியப்பட வைத்தவர் கமல் என உதயகுமார் இந்த சம்பவத்தை உதாரணமாக கூறினார். இப்படி கிட்டத்தட்ட 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் அடையாத சாதனைகள் இல்லை. வாங்காத பட்டங்கள் இல்லை. இன்னமும் ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வருகிறார் கமல்.
இதையும் படிங்க: அறிவு இல்ல உங்களுக்கு? ரோபோ சங்கர் மகளை பார்த்து இப்படி ஒரு கேள்வியா? என்ன நடந்துச்சு தெரியுமா