Cinema History
சகலகலா வல்லவன் பிளாக்பஸ்டர் ஹிட்!.. 100வது நாளில் கமல் செய்த காரியம்!.. நெகிழும் நடிகை…
5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். நடிப்பு, நடனம், இயக்கம், தயாரிப்பு, கதை, திரைக்கதை எழுதுவது என இவருக்கு எல்லாமே அத்துப்படி. அதனால்தான் சினிமா உலகில் சகலகலா வல்லவனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசனை ஒரு ஹீரோவாக உருவாக்கிய இயக்குனர் பாலச்சந்தர்தான்.
அவரின் இயக்கத்தில் பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கமல்ஹாசன். பல காதல் படங்களில் நடித்ததால் அவருக்கு காதல் மன்னன் என்கிற பட்டமும் கிடைத்தது. பல நடிகைகளுடனும் டூயட் பாடி பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் மாறினார்.
இதையும் படிங்க: மொத்தமா மண்ணை கவ்விய ‘மாயவன்’! இரண்டாம் பாகம் எடுப்பதற்கான காரணம் இதுதான்
துவக்கத்தில் ரஜினியுடன் இணைந்து பல படங்களிலும் நடித்து வந்த கமல் ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார். ரஜினியும், கமலும் தனித்தனி ஸ்டைல்களில் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்கள். ரஜினி வசூல் மன்னனாக மாறி சூப்பர்ஸ்டார் ஆனார். கமலோ ரசிகர்களால் கொண்டாடப்படும் உலக நாயகனாக மாறினார்.
திரைத்துறையில் எம்.ஜி.ஆரும், விஜயகாந்தும் பலருக்கும் பல வகைகளில் உதவி செய்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி, கமல் போன்றவர்கள் செய்த உதவி பலருக்கும் தெரியாது. அவை வெளியே வரவில்லை என்பதே நிஜம். பல தயாரிப்பாளர்களுக்கு சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறார் கமல்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் நடித்து 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்!. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..
அன்பே சிவம் படத்தில் கூட அவர் 50 சதவீத சம்பளம் மட்டுமே வாங்கினார். படம் ஓடினால் கொடுங்கள் என தயாரிப்பாளரிடம் சொன்னார். இந்த தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் முரளிதரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். குறிப்பாக நலிவடைந்த பல கலைஞர்களுக்கும் கமல் சத்தமில்லாமல் உதவி செய்திருக்கிறார். அவையெல்லாம் வெளியே வரவில்லை.
இந்நிலையில், நடிகை துளசி சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘சகலகலா வல்லவன் படம் வெற்றி பெற்று நன்றாக ஓடியது. அப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் அப்படத்தில் பணிபுரிந்த எல்லோருக்கும் பட்டு வேஷ்டியும், பட்டு சட்டையும் கமல் கொடுத்தார். இப்போது வரை அது யாருக்கும் தெரியாது’ என கூறியிருக்கிறார்.