பொம்மையா நிக்குற காருக்கு அது எதுக்கு? கமல் படத்தில் நடந்த வில்லங்கமான சம்பவம் – இருந்தே ஒன்னும் போச்சா?

Published on: September 15, 2023
kamal
---Advertisement---

Actor Kamal: தமிழ் திரையுலகில் கமல் ஒரு மாபெரும் ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வரும் கமல் அடுத்தடுத்து எச்.வினோத் மற்றும் மணிரத்தினம் போன்றவர்களுடன் கூட்டணி அமைக்க தயாராகியிருக்கிறார். விக்ரம் படத்தின் வெற்றி கமலின் புகழை எங்கேயோ கொண்டு சென்று விட்டது.

எதையும் பகுத்தாய்வு செய்து தீர்க்கமான முடிவெடுப்பவர் கமல். ஆனால் அவர் நடித்த ஒரு படத்திலும் குழப்பம் நடந்திருக்கிறது. சித்ரா லட்சுமணன்  இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் சூரசம்ஹாரம். இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் வியட்நாம் சுந்தரம். படத்தில் ஏசிபி அதி வீரபாண்டியன் போலீஸ் அதிகாரியாக கமல் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: திருடுனேன் ஆனா திருடல… எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் காமெடி செய்த அட்லீ… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!

எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு சூரசம்ஹாரம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் கமல் மிகவும் அழகாக இருப்பார். கமலுக்கு ஜோடியாக நிரோஷா நடிக்க பாக்ஸ் ஆஃபிஸில் படம் சரியான வசூலை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.

இளையராஜா இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே செம ஹிட். குறிப்பாக நடிகை குயிலி சிறப்புத்தோற்றத்தில் வந்து ஆடிய வேதாளம் வந்து நிக்குது பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு லாபத்தை ஈட்டித்தரப் போய் அன்று நடக்க இருந்த சூட்டிங்கையே நிறுத்திய சம்பவத்தை பற்றி சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: சொன்னா நம்பணும்.,. இதுவும் ஜாக்கெட்டுதான்!.. பாதி மறச்சி கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்…

அதாவது ஒரு காட்சியில் கமல் ஓட்டி வரும் காரை அந்தப் படத்தின் வில்லன் கிரேன் மூலமாக அப்பளம் போல் நொறுக்க வேண்டும். காட்சியில் கார் அங்குமிங்குமாக போக கடைசியாக கார் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும். அப்போது இந்த மாதிரி ஷார்ட்டை தொடர்ந்து எடுக்காமல் காரை ஒரு முறை இந்த பக்கமும் மறுமுறை அந்தப் பக்கமும் போகச் சொல்லித்தான் எடுப்பார்களாம்.

இதற்காக தனியாக ஒரு காரை தயார் நிலையில் வைத்திருப்பார்களாம். அப்படி எல்லாம் தயார் நிலையில் இருக்க சித்ரா லட்சுமணன் ரெடி ஆக்‌ஷன் என்று சொல்லி காரை இந்தப் பக்கம் ஓட்டி வரச் சொல்லியிருக்கிறார். அப்போது யுனிட் ஆள்கள் திகைத்துப் போய் நின்றிருக்கின்றனர். அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது. சித்ரா லட்சுமணனுக்கு கொஞ்சம் லாபத்தை கொடுப்போம் என்று கருதி அப்பளம் போல் நொறுக்கப் போகும் காருக்கு எதற்கு இன்ஜின் என்று காரிலிருந்து இன்ஜினை தனியாக கழட்டி வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: தூள் கிளப்புமா ‘மார்க் ஆண்டனி’! இதுல இத்தனை விஷயங்கள் இருக்கா? படத்துக்கு ஹைப்பே இதுதான்

அந்த நேரத்தில் சித்ரா லட்சுமணனுக்கு இது வேடிக்கையாக இருந்தாலும் வேதனையான வேடிக்கை சம்பவமாக நடந்து முடிந்திருக்கிறது. ஏனெனில் பெரிய ஹீரோ. இருந்தது ஒரு கார். அதுவும் இப்படி எனும் போது அன்று நடக்க இருந்த படப்பிடிப்பில் கொஞ்சம் சலசலப்பும் ஏற்பட்டதாம்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.