சாட்டையை வீசிய கமல்… மீண்டும் உள்ளே வரும் அதே நடிகர்கள்… தக் லைஃப் ஸ்பெஷல்!...
Thug life: கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் தக் லைஃப் படத்தில் வெளியேறிய நடிகர்களை உள்ளே இழுத்து போட கமல் தன் ஸ்டைலில் களம் இறங்கி இருக்கிறார். இதுகுறித்து சுவாரஸ்ய தகவல்கள் வைரலாகி வருகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் ரிலீஸானது. இதில் கமலின் கெட்டப்புக்கு செம ரீச் கிடைத்தது. கமல் மட்டுமல்லாமல் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரிலீஸானது. ஆனால் படப்பிடிப்பு தேர்தலை முன்னிட்டு தொடர்ச்சியாக தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால், தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிஸியாக இருக்கும் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அப்படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து, ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகுவதாக தகவல்கள் கசிந்தது. இதற்கு காரணம் சிம்புவும் எனவும் சிலர் கிசுகிசுத்தனர். அதையடுத்து, அவர் கேரக்டரில் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படி நடிகர்கள் தொடர்ந்து வெளியேறுவது கமல்ஹாசனுக்கு தொடர்ந்து அதிருப்தியை உருவாக்கி இருக்கிறதாம்.
இதனால் அவரே களத்தில் இறங்கி மீண்டும் அவர்களை தக் லைஃபிற்குள் அழைத்து வந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதேவேளையில், நடிகர் சிம்புவும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. விரைவில் தேர்தல் முடிந்த பின்னர் படப்பிடிப்பு செர்பியாவில் தொடங்க இருக்கிறதாம். அங்கு, கமல்ஹாசன், திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது.
இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..
இந்நிலையில் ஜெயம் ரவி தரப்பில் இருந்து, படத்தில் இருந்து விலகியது உறுதி தான். ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் பிஸியாக நடித்து வருவதால் தக் லைஃபில் அவரால் நடிக்க முடியாது எனவும் தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்த மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.