நல்லவேளை மோகன் வந்து என்னை காப்பாத்தினாரு!.. இல்லன்னா அவ்ளோதான்.. கமலை புலம்ப விட்டாங்களே!..

mohan
Mohan Kamal: 80கள் காலகட்டத்தில் ரஜினி, கமல் இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டு வந்தார்கள். அவர்களின் படங்கள் மட்டும் தான் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தும் வந்தன. அவர்கள் இருக்கும் வரை பாக்ஸ் ஆபிஸிலும் சரி விமர்சன ரீதியிலும் சரி வேற எந்த நடிகர்களாலும் அவர்களிடத்தை பிடிக்க முடியாமல் தான் இருந்தார்கள்.
ஆனால் ராமராஜன், மோகன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்களை கொடுத்து ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் பெற்றனர். ஒரு பக்கம் ராமராஜன் ஒரு பக்கம் மோகன் என இருவரும் மாறி மாறி கோல் அடித்து வந்தனர். இதில் மோகனை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பெண் ரசிகைகளை கவர்ந்த ஒரு நடிகராக திகழ்ந்தார் மோகன்.
இதையும் படிங்க: ரீ எண்ட்ரியில் ஸ்கோர் செய்யும் மோகன்!.. கோட்டைவிட்ட ராமராஜன்!.. சாதிக்குமா சாமானியன்?…
அதற்கு ஏற்ற வகையில் மைக் பிடித்து பல படங்களில் பாடுவதைப் போல் நடித்தது இவரை மைக் மோகன் என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதற்கேற்ற வகையில் இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் ஹிட் அடித்தன. இந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியான மைக் மோகன் என்ற பெயர் கொஞ்சம் விட்டிருந்தால் கமலை தான் வந்து சேர்ந்திருக்கும்.

mike Mohan
இதைப் பற்றி பிரபல நடிகர் காதல் சுகுமார் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது விருமாண்டி படத்தின் போது காதல் சுகுமாரிடம் கமல் ‘எனக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே. ஏனெனில் இப்படித்தான் நான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் முதன்முதலில் மைக் பிடித்து பாட போய் அந்த படம் மாபெரும் ஹிட் ஆனதனால் தொடர்ந்து மைக் கொடுத்து என்னை நடிக்க வைத்தனர்.
இதையும் படிங்க: அந்த வீடியோ மட்டும் பத்தாது.. நிம்மதியில்லாமல் களத்தில் இறங்கிய கார்த்திக்…
நல்ல வேளையாக மோகன் வந்து அந்த மைக்கை வாங்கிக் கொண்டார். அதிலிருந்து மோகனுக்கு அந்த மைக் போய்விட்டது. அதுவரை எனக்கு இந்த மைக்கை பிடித்து நடிக்க ஒரு மாதிரியாகவே இருந்தது’ என கமல் கூறினாராம்.