Cinema History
Kamal Vs Rajni: கமல் இப்படியா செஞ்சாரு? ரஜினிக்கு எவ்வளவு அவமானம்னு பாருங்க..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பைரவி படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இவருடைய மகன் பாலாஜி பிரபு. இவர் ஆஸ்கர் மூவீஸின் தயாரிப்பாளராக உள்ளார். கமல், ரஜினி குறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க…
ஆர்.சி.சக்தியும், எங்க அப்பாவும் ப்ரண்ட்ஸ். சின்னவயசுல படம் பார்த்துட்டு வந்து விவாதிப்பாங்க. அப்புறமா வளர்ந்ததும் இருவரும் இயக்குனர் ஆகிடுறாங்க. அதுல ஒருத்தர் ரஜினியை வைச்சி படம் பண்றாரு. இன்னொருத்தர் கமலை வச்சிப் படம் பண்றாரு.
கமல் – ஆர்.சி.சக்தி
கமல் 76ல் ஆர்.சி.சக்திக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுக்குறாரு. அது தான் உணர்ச்சிகள் படம். அப்பா வந்து பைரவில ரஜினியை வைத்து படம் பண்றாரு. இது எதேச்சையா நடந்த விஷயம். நிறைய பேருக்குத் தெரியாது.
ஆர்.சி.சக்தியோட 75வது பர்த்டே. 2014ன்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு ஹோட்டல்ல அவருக்கு மோதிரம் எல்லாம் போட்டு கொண்டாடினார். அப்போ கௌதமியோட வந்துருந்தாரு. நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறவர் கமல். அதற்கு இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ஜி.என்.ரங்கராஜன் என்ற இயக்குனர் கமலை வச்சி மீண்டும் கோகிலா, கல்யாணராமன் படங்களை இயக்கியவர்.
பொருளாதார சிக்கலில் இயக்குனர்
ஒரு காலகட்டத்தில் அவர் ரொம்ப பொருளாதார சிக்கலில் இருந்தார். வீட்டைக்கூட அடமானம் வைத்துவிட்டார். அதைத் திருப்ப முடியாத சூழல். அப்போ கமலிடம் போய் ‘நீதான் எனக்கு உதவணும்’னு சொன்னார். அவருக்காகவே கமல் மகாராசன் என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த லாபத்தை கமல் அவரிடம் கொடுத்தார்.
கமல் செய்த உதவி
அடமானத்தை மீட்டு வீட்டுப் பத்திரத்தை அந்த இயக்குனரிடம் கொடுத்தார். அதன்பிறகு எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணனும்னு சொன்னார். இனிமே நீங்க சொந்தப்படம் எடுக்கக்கூடாதுன்னும் அன்புடன் கேட்டுக்கொண்டார் கமல். திரும்பவும் படம் எடுத்து நஷ்டப்பட்டு மீண்டும் வீட்டை அடமானம் வச்சிடக்கூடாதுங்கறதுக்காகத் தான் அப்படி சொன்னாராம். கமலைப் பொருத்தவரை சினிமாவுக்கு அவர் ஒரு பொக்கிஷம்.
அவமானப்பட்ட ரஜினி
அபூர்வ ராகங்கள் படத்தில் கமல் தான் கதாநாயகன். ரஜினி முக்கிய கேரக்டரில் வருவார். அதுதான் ரஜினியின் முதல்படம். பாலசந்தர் இயக்கியுள்ளார். அப்போ பாலசந்தர் சார் கூட ‘உள்ளே கமல்னு ஒரு பையன் இருக்கான். அவனைப் பார்த்துக் கத்துக்கோ’ன்னு ரஜினியிடம் அடிக்கடி சொல்வாராம்.
கமல், ரஜினி சாரை அவ்வப்போது சூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வாராம். அப்போ ரஜினிசாரே ஒரு பேட்டியில் சொன்னாராம். நம்ம எல்லாம் கமல் சாரோடு சேர்ந்து காரில போவோமான்னு அவரே அவரைக் கிள்ளிப் பார்த்துக் கொள்வாராம். அப்படி இருந்தவருக்கு கமலுடன் போட்டி போடும் காலமும் வருகிறது.
கடும் போட்டி
Also Read: என் பொண்டாட்டிதான் இருக்கா வேணுமா?.. கோபப்பட்ட தயாரிப்பாளர்.. முரளி படத்தில் நடந்த கலாட்டா!..
அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும்னு நிறைய படங்கள்ல இருவரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. அப்புறம் இருவரும் தனித்தனியா நடிச்சாங்க. அந்தக் காலத்துல முரட்டுக்காளை, போக்கிராராஜா, சகலகலாவல்லவன்னு நிறைய இருவருக்கும் போட்டிப்படங்கள் வந்தன. கமல் புதுமையான படங்கள் நடித்தார்.
ரஜினி ஆக்ஷன் படங்களில் நடித்தார். அப்போது ரஜினிகாந்த் எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரம் ரஜினியின் ஸ்டைலை ஆடியன்ஸ் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க.