விஜயை அந்த விஷயத்தில் ஓரம் கட்டிய கமல்... அப்படி என்ன பெரிசா நடந்துடுச்சு..?

தற்போது திரையுலகில் தளபதி ஒரு பக்கம். உலகநாயகன் ஒரு பக்கம். ரெண்டு பேரும் மாறி மாறி ட்ரெண்டிங்க்ல இருக்காங்க. அதாவது கமலுக்கு கல்கி, இந்தியன் 2 என்ற இரு படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகிறது. அதே போல கோட் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள், 2வது சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ என அடுத்தடுத்து அப்டேட்கள் வருது. இதனால நெட்டிசன்கள் அவங்களைத் தான் எப்பவும் வலைவீசி தேடி வர்றாங்க.

இதையும் படிங்க... கோட் படத்தில் பவதாரிணியை பாட வைத்தது ஏன்னு தெரியுமா? கனத்த இதயத்துடன் யுவன் சொன்ன தகவல்

சமீபத்தில் தளபதி விஜயின் பிறந்த நாள் கோலாகலமாக நடந்தது. இந்த மாதம் 22ம் தேதி (நேற்று) பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி 20, 21, 22 என இந்த 3 நாள்களும் தளபதி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ரொம்ப டிரெண்டாகிக் கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் இந்தியன் என்ற ஹேஷ்டேக் ரொம்ப டவுனா இருந்தது.

அதுக்கு என்ன காரணம்னா ரொம்ப நாளா இந்தியன் 2 படத்துக்கு எந்த அப்டேட்டும் இல்லாம இருந்தது. அதனால ரசிகர்கள் எல்லாரும் லைகாவைத் திட்டித் தீர்த்தாங்க.

தொடர்ந்து இன்று இந்தியன் 2 படத்தோட டிரெய்லர் குறித்த போஸ்டர் வெளியாகி இருந்தது. அதனால இந்தியன் ஹேஷ்டேக் கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறி இந்தியாவிலேயே கமல்ஹாசன் என்ற ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தில இருக்கு.

ஏன்னா கல்கி படத்துக்கும், இந்தியன் 2 படத்துக்கும் சேர்த்து கமல்ஹாசன் என்ற ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்திலயும், அடுத்து அண்ணா, தளபதி, கோட் என்ற ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. என்டர்டெயின்மென்ட் லிஸ்ட்ல கமல்ஹாசன் என்ற ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்துலயும், ட்ரெண்டிங் இந்தியா அளவுல தளபதி கோட் ஹேஷ்டேக்கும் இருக்கு.

Indian 2

Indian 2

அந்த வகையில் கமலும், விஜயும் தான் இன்டர்நெட்டையே ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். எது எப்படியோ ரெண்டு பேரு படமும் வந்து சமுதாயத்துக்கு நல்ல கருத்துகளை சொன்னா சரி தான். ரசிகர்களுக்கும் தரமான சம்பவமாக இருக்கணும்.

தளபதி விஜய், உலகநாயகன் கமல் என இருவருமே அரசியலில் இறங்கி அரசியல்வாதிகளாகவும் இருப்பதால் இவர்களது படங்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் வந்துள்ளன என்பதே உண்மை.

 

Related Articles

Next Story