500 ரூபாய் வாங்கி கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!.. அவரையே கோபப்பட வச்ச தயாரிப்பாளர்!..

by சிவா |   ( Updated:2024-03-06 11:03:35  )
kamal
X

தமிழ் திரையுலகில் 5 வயது முதல் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். 60 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் கலைஞர் அவர். குழந்தை நட்சத்திரம், நடன இயக்குனரிடம் உதவியாளர், துணை நடிகர், கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர்.

பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சொந்தமாக பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஹே ராம், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தேவர் மகன், மகாநதி உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி இருக்கிறார். 35 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்து வெளியான குணா படத்தை வைத்துதான் இப்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை உருவாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: குணா படம் உருவானபோது நடந்த அடிதடி!.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதன் பின்னணி!..

தமிழ் திரையுலகில் மிகவும் திறமை வாய்ந்த நடிகராக பார்க்கப்படுகிறார். அதனால்தான் அவரை ரசிகர்களும், நடிகர்களும் உலக நாயகன் என அழைக்கிறார்கள். 80களில் பெரும்பாலும் நடனமாடும் கலைஞராகத்தான் கமல் அறியப்பட்டார். கமல் படம் என்றால் ஜிகுஜிகுவென உடையணிந்து மைக்கை பிடித்து பாடிக்கொண்டு நடனம் ஆடுவார் என்பதுதான் அவரின் இமேஜாக இருந்தது.

ஆனால், உண்மையில் அப்படி நடிப்பதில் கமலுக்கு விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. அதனால்தான் பாலச்சந்தர் படங்களில் நடிப்புக்கு தீனி போடும் நல்ல நல்ல வேடங்களில் நடித்தார். அவள் அப்படித்தான் படத்தில் அவர் நடித்ததற்கு கூட அதுதான் காரணம். கமல் அந்த மனநிலையில் இருந்த போது குடிசை படத்தின் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஜெயபாரதி ஒரு கதை எழுதினார்.

அந்த கதையை படமாக்க விரும்பிய ஜெயபாரதி தயாரிப்பாளரை தேடி வந்தார். ஒருவழியாக தயாரிப்பாளர் கிடைத்தார். ஆனால், ‘இந்த கதையில் கமல்ஹாசன் நடித்தால் நான் தயாரிக்கிறேன்’ என அவர் சொல்ல ஜெயபாரதியும், அந்த தயாரிப்பாளரும் கமலை நேரில் சந்தித்து பேசினார்கள். அந்த கமலுக்கு பிடித்துப்போனதால் உடனே நடிக்க சம்மதம் சொன்னார். கமலுக்கு தயாரிப்பாளர் 500 ரூபாயை முன் பணமாக கொடுத்தார். கமலும் அதை ஏற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.

அதன்பின் இந்த படத்தில் பாடல் காட்சிகள் வேண்டும் என அடம்பிடித்த தயாரிப்பாளர் கண்ணதாசனை எழுத வைத்து 4 பாடல்களையும் உருவாக்கினார். இது தெரிந்ததும் கோபமடைந்த கமல் இயக்குனர் ஜெயபாரதியை அழைத்து ‘ நான் எல்லா படங்களிலும் நடனமாடி கொண்டிருக்கிறேன். உங்கள் கதையில் நடிக்க நான் ஒப்புக்கொண்டதற்கு காரணமே அதில் பாடல்கள் இல்லை என்பதால்தான். இப்போது பாடல்களை சேர்த்தால் என்ன அர்த்தம்? இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டார்.

தேசிய விருதுக்கு போகும்போது பாடல்களை நீக்கிவிட்டு அனுப்பலாம் என ஜெயபாரதி கமலை சமாதானம் செய்தும் அவரின் மனம் மாறவில்லை. கடைசிவரை அந்த படம் உருவாகவில்லை.

Next Story