மூன்றாம் பிறை கிளைமேக்ஸில் திடீரென கமல் செய்த மேஜிக்!.. அசந்து போன இயக்குனர்!..
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகள் பாலுமகேந்திரா, கமல்ஹாசன், இளையராஜா மூவரும் இணைந்த கூட்டணியில் உருவான திரைப்படம்தான் மூன்றாம் பிறை. நடிகை ஸ்ரீதேவியும் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். 1982ம் வருடம் வெளியான இப்படம் ரசிகர்களிடன் மனதை கசக்கி பிழிந்தது.
ஏனெனில் காதலின் பிரிவை, காதலின் வலியை ரசிகர்களுக்கு உணர்த்திய படம் இது. ஒரு வாலிபன் நண்பனின் வற்புறுத்தலால் விருப்பம் இல்லாமல் ஒரு பாலியல் விடுதிக்கு செல்கிறான். அங்கு மனரீதியாக பாதிக்கப்பட்டு குழந்தை போல நடந்துகொள்ளும் ஒரு பெண்ணை பார்க்கிறான்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் எங்களை மோசம் பண்ணிட்டாரு!.. இவ்ளோ பெரிய லாஸ் ஆகிடுச்சு!.. அழுது புலம்பும் பிரபல இயக்குநர்!
அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றுவிடுகிறான். குமரி ஆனாலும் குழந்தை போல இருக்கும் அவளை பாதுகாக்கிறான். அவளும் அவன் மீது அன்பாக இருக்கிறாள். ஒருகட்டத்தில் அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற மனநிலைக்கு அவன் மாறுகிறான். அவளுக்கு ஒன்று என்றால் பதறிப்போகிறான்.
ஒருபக்கம், அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவளை தேடுகிறார்கள். ஊட்டியில் அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவளை மீட்கிறார்கள். ஆனால், அவளுக்கு எதும் நினைவில் இல்லை. தனது அப்பா, அம்மாவை மறந்து போயிருக்கிறாள் அவள். ஒருகட்டத்தில் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நினைவு திரும்புகிறது.
இதையும் படிங்க: ஒரே தீபாவளிக்கு ரிலீஸான கமல்ஹாசனின் 4 திரைப்படங்கள்…இதில் எந்த படம் சூப்பர்ஹிட் தெரியுமா?
அவளை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்வது கேள்விப்பட்டு கதாநாயகன் ரயில்வே நிலையம் ஓடி வருகிறான். அவளுக்கோ அவனை யார் என்றே தெரியவில்லை. துடித்துப்போகும் அவன் அவளுக்கு தன்னை நினைவு படுத்துவதற்காக வழக்கமாக அவளிடம் விளையாடும் விளையாட்டை விளையாடி காட்ட அவளோ அவனை பைத்தியம் என நினைத்து பிரட் துண்டை தூக்கி அவன் மீது எறிகிறாள். இந்த காட்சியை எல்லோரும் திரையில் பார்த்திருப்பார்கள். ரயில் செல்ல செல்ல அவன் பின்னால் ஓட ரயில் சென்றுவிடும். அவன் ‘விஜி. விஜி’ என அழுது கொண்டே பைத்தியம் போல் மாறுவான்.
அந்த கிளைமேக்ஸ் காட்சியை எடுக்கும் முன் ரிகர்சல் பார்த்துவிட்டுதான் எடுத்திருக்கிறார்கள். ரயில் நகரும் போது ஸ்ரீதேவியை பார்த்துகொண்டே ஒடிவரும் கமல்ஹாசன் அங்கு இருக்கும் ஒரு மின்சார கம்பத்தில் மோதி கீழே விழுந்து, மீண்டும் எழுந்து ஓடிவருவார். இது ரிகர்சலில் இல்லை. அந்த இடத்தில் திடீரென கமலே யோசித்து அதை செய்திருக்கிறார். அது அந்த காட்சிக்கே கூடுதல் பலத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.