ஹெச்.வினோத் படத்துக்காக மீண்டும் துப்பாக்கி எடுக்கும் கமல்ஹாசன்!.. மெர்சலாக்கும் டிரெய்னிங் வீடியோ…

Published on: September 7, 2023
kamal
---Advertisement---

kamalhaasan 233 : தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளையும், வித்தியாசமான கதை களங்களையும் ரசிகர்களுக்கு காட்டி வருபவர் கமல்ஹாசன். ஐந்து வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். அதாவது 60 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் அனுபவமுள்ள நடிகர் இவர்.

பல வருடங்களுக்கு முன்பே வசனமே இல்லாமல் பேசும் படம் என்கிற படத்தை எடுத்து ஆச்சர்யப்பட வைத்தவர். பார்வை இல்லாதவராக ராஜ பார்வை என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், விஸ்வரூபம், ஹேராம், தசாவதாரம் என நடிப்பில் வெரைட்டி காட்டியவர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு இவ்வளவோ கஞ்சத்தனம் ஆகாதுப்பா… இந்த விஷயத்துல கமல், அஜித்லாம் க்ரேட்ல!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் வசூலில் சக்கை போடு பட்டது. இதுவரை எந்த கமல் படமும் வசூல் செய்த பணத்தை இப்படம் வசூல் செய்தது. விக்ரம் படத்தின் வெற்றியால் கமலின் சினிமா கேரியர் மீண்டும் டேக் ஆப் ஆகியுள்ளது.

ஏனெனில் சில வருடங்கள் படத்தில் நடிக்காமல் இருந்தது, அரசியலுக்கு சென்றது, பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த போய்விட்டது என கமலின் சினிமா கேரியர் அவ்வளவுதான் என நினைத்தவர்களுக்கு நானும் களத்தில் இருக்கிறேன் என கமல் நிரூபித்த படமாக விக்ரம் அமைந்துவிட்டது.

இதையும் படிங்க: நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்!… எனக்கே ஸ்கெட்ச் போடுறியா?… லோகேஷை லாக் செய்த கமல்..

எனவே, கமல் அடுத்தடுத்த நடிக்கபோகும் படங்கள் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மணிரத்னம், ஹெச்.வினோத் என பலரின் பெயரும் அடிபட்ட நிலையில் கமலின் அடுத்த படத்தை இயக்குவது ஹெச்.வினோத் என்பது உறுதியானது. இந்த படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்காக கமல் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து வருகிறார். இது தொடர்பான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து Guts & Guns என கேப்ஷன் கொடுத்துள்ளது. இது கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கெடுத்துள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.