கமலுக்கு பிடிக்காத 3 வார்த்தை!. சொன்னா செம கடுப்பாயிடுவாரு!.. பிரபலம் சொன்ன தகவல்!..

ஐந்து வயது சிறுவனாக இருந்த போதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். சினிமா வியாபாரம், தயாரிப்பு என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர். நடிப்பு, நடனம், இயக்கம், கதை, திரைக்கதை என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டவர். நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
இதனால்தான் இவரை ரசிகர்கள் உலக நாயகன் என அழைக்கிறார்கள். தன் திரை வாழ்வில் பல வெற்றி, தோல்விகளை பார்த்தவர். தனது படங்களில் பல பரிசோதனை மற்றும் புதிய முயற்சிகளை செய்து பார்த்தவர். தமிழ் சினிமாவில் விதவிதமான மேக்கப்புகள் போட்டு வித்தியாசமான தோற்றங்களில் அதிகம் நடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே.
இதையும் படிங்க: சாதனை செய்த கமல்ஹாசன்!. விழாவுக்கு வர மறுத்த பிரபல நடிகர்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…
திரையுலகில் கமல்ஹாசன் செய்த பரிசோதனை முயற்சிகளை எந்த நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் செய்யவே முடியாது என சொல்லுமளவுக்கு செய்து முடித்துவிட்டார். இன்னமும் அதே கலை தாகத்தோடு செய்து கொண்டும் இருக்கிறார். அதனால்தான் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் இருக்கிறது.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு பல வருடங்களாக பி.ஆர்.ஓவாக இருக்கும் நிகில் முருகன் ஊடகம் ஒன்றில் கமலை பற்றி பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். நான் கமல் சாருடன் 14 வருடங்களாக வேலை செய்திருக்கிறேன். அவருக்கு செலவு ஆகும், கஷ்டமா இருக்கு.. முடியாது என்கிற இந்த மூன்று வார்த்தைகள் பிடிக்கவே பிடிக்காது.
இதையும் படிங்க: ரஜினி, கமல், விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன்.. யாரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷான்னு இந்த ஆண்டு தெரிஞ்சிடும்!..
அவர் ஒன்றை சொன்னால் அதை முயற்சி செய்து பார்த்துவிட்டு நம் கருத்தை சொல்லாலம். ஆனால், முயற்சியே செய்யாமல் எதிர்மறையாக சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அதேபோல், யாரேனும் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார். யாராக இருந்தாலும் கண்ணோடு கண் பார்த்துதான் பேசுவார். அவரை ஏமாற்றவே முடியாது. கண்டுபிடித்துவிடுவார்.
நேர்மையாக இருப்பது அவருக்கு பிடிக்கும். உண்மையாக நடந்து கொள்பவர்களை மிகவும் பிடிக்கும். அவர் ஒன்றை சொல்வது நமக்கு புரியவில்லை என்றால் புரிந்தது போல தலையாட்டினால் அவருக்கு பிடிக்காது. ‘நீங்கள் சொல்வது புரியவில்லை’ என்று சொன்னால் அதை விளக்கி சொல்வார்’ என பல தகவல்களை நிகில் முருகன் பகிர்ந்து கொண்டார்.