Connect with us

Cinema History

கிடைச்ச வாய்ப்பை இப்படி விட்டோமே!.. இன்னைக்கு வரை கமல் ஃபீல் செய்யும் அந்த ஒரு படம்…

சிறுவயதிலேயே கமல்ஹாசன் எம்.ஜி.ஆரோடு இணைந்து ஆனந்தஜோதி படத்தில் நடித்திருந்தார். ஆனாலும், ஹீரோவான பிறகு அவருடைய தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பை கமல்ஹாசனால் ஏற்க முடியாமல் போயிருக்கிறது. அதை நினைத்து இன்று வரை கமல் வருத்தப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் சினிமாவுக்குள்ள வந்து உதவி நடனக் கலைஞர் உள்ளிட்ட பல துறைகளிலும் பணியாற்றி கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் கமல். மலையாளத்தில் கன்யாகுமரி படம் மூலம் அவரை கே.எஸ்.சேதுமாதவன் கதையின் நாயகனாக்கினார். சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆரோடு நல்ல நெருக்கத்தில் இருந்தவர் கமல்.

இதையும் படிங்க: ‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?

இதனாலேயே கமல் மேல தனிப்பாசமும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். தனது நூறாவது படமான ராஜபார்வை சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கும் தலைமையேற்று சிறப்புச் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒரு பக்கம் எம்.ஜி.ஆரோட நல்ல பழக்கம் – இன்னொரு பக்கம் இயக்குநர் சேது மாதவனோட படத்தில் கதை நாயகனாக நடித்தவர் கமல். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும்? அதில் கமல் இல்லாமல் எப்படி. அப்படி ஒரு வாய்ப்பும் கமலுக்கு வந்தது. 1974 காலகட்டத்தில் பிஸியான நடிகராக கமல் இருந்த நேரம். அப்போது எம்.ஜி.ஆரை வைச்சு சேதுமாதவன் நாளை நமதே படத்தை எடுத்தார்.

இதையும் படிங்க: நாங்க பெருசா பண்ணிட்டு இருக்கோம்… கோட் தயாரிப்பாளர் போஸ்டால் எக்ஸ் தளமே சூடா இருக்கே!..

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பி ரோலில் நடிக்க வாய்ப்பு கமலுக்கு வருகிறது. இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தும் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால், அந்தப் படத்தில் கமலால் நடிக்க முடியாமல் போனது. மேலும், `அன்பு மலர்களே… நம்பி இருங்களேன்… நாளை நமதே’ பாடலை எம்.ஜி.ஆரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பை இழந்து விட்டதாக கமல்ஹாசன் இன்றுவரை நினைப்பதுண்டாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top