பிரம்மாண்டத்தின் உச்சம்.. வெளியான ‘கங்குவா’ பட டிரெய்லர்! ஒரே கூஸ் பம்ப்தான்

Published on: November 10, 2024
surya
---Advertisement---

Kanguva Trailer: சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கங்குவா படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. பல மொழிகளில் தயாராகியிருக்கும் கங்குவா திரைப்படம் சூர்யா கெரியரிலேயே மிகவும் பேசப்படும் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இரண்டு கெட்டப்களில் இந்தப் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இதுவரை இல்லாத ஒரு பெரிய ஓப்பனிங் சூர்யா படத்திற்கு இருக்கிறது என்றால் அது கங்குவா படத்திற்குத்தான். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது பல தகவல்களை சூர்யா பகிர்ந்திருந்தார். சிறுத்தை சிவாவும் அவருடைய அனுபவங்களை கூறினார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கங்குவா படத்திற்காக சூர்யா கடும் உழைப்பை போட்டிருக்கிறார்.

அதை படத்தின் டீசர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. மேலும் படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.படமுழுக்க ஒரு அடந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார் என்றும் சிறுத்தை சிவா கூறினார். இதில் அவருக்கு தோள்பட்டை பகுதியில் ஒரு சிறிய விபத்தும் ஏற்பட்டது.

kangu
kangu

அப்போது அந்த விபத்து ஏற்பட்டாலும் எழுந்து வந்து இந்த டேக் ஓகேவா இல்லை மறுபடியும் டேக் போகனுமா என்றுதான் சூர்யா கேட்டாராம். இப்படி ஒரு நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என சிறுத்தை சிவா பெருமிதத்துடன் கூறினார். மேலும் கங்குவா படம் 2000 கோடி வசூல் பெறும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

ஞானவேல் ராஜாவை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் பில்டப் பண்ணத்தான் செய்வார். இதை பற்றி கூட அந்த மேடையில் சூர்யா கூறும் போது ‘அவ்வப்போது லூஸ் டாக் விட்டுருவாரு.. நான் கொஞ்சம் அடக்கி வாசிங்கனு சொல்வேன்’ என்று கூறியிருந்தார். படம் ரிலீஸாக இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் 7 மணிக்கு ரிலீஸ் என்று அறிவிக்க திடீரென 9 மணிக்கு தள்ளி போனது. ஒரு வழியாக படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.