‘கங்குவா’ நடிகையின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி.. அட பாவமே!…

Published on: November 16, 2024
---Advertisement---

Disha patani: பண மோசடிகளால் ஏழை, எளிய மக்களை விட படித்த மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் நபர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகை திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி போலீசில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் ஐந்து பேர் அடங்கிய கும்பல் அரசுத்துறையில் உயர் பதவி வாங்கித் தருவதாகவும், தங்களுக்கு உயர்மட்ட தொடர்பு இருப்பதாகவும் ஆசைவார்த்தைகள் கூறினர்.

இதையும் படிங்க: 11 வருடங்களாக கடும் நஷ்டத்தில் சூர்யாவின் படங்கள்…. கங்குவா படத்துக்கு இத்தனை கோடி இழப்பா?

இதில் மயங்கிய ஜெகதீஷ் சிங் பதானி அவர்களிடம் ரொக்கமாக ரூ.5 லட்சம், வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் அளித்தார். நாட்கள் கடந்தும் அந்த கும்பலிடம் இருந்து எந்தவித தகவலுமில்லை. இதையடுத்து ஜெகதீஷ் சிங் தான் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு அவர்களிடம் கேட்டார்.

disha

ஆனால் ஒரு முன்னாள் காவல் அதிகாரி என்கிற பயம் கொஞ்சமும் இல்லாமல் அவர்கள் ஜெகதீஷ் சிங்கை மிரட்ட ஆரம்பித்தனர். மேலும் பணத்தை திரும்ப அளிக்க முடியாது என்றும் கூறினர். வேறு வழியின்றி ஜெகதீஷ் சிங் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்க, காவல்துறை அந்த 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திஷா பத்தானி துவக்கத்தில் மாடலிங் துறையில் இருந்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். நிறைய தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படத்திலும் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Nayanthara: மிரட்டிய நயன்தாரா – விக்கி ஜோடி!.. காண்டான தனுஷ்!.. அட அவர் மேல தப்பே இல்லையே!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.