கங்குவா பட தேதியை அறிவித்த படக்குழு! சொன்னதை செஞ்சிட்டாரு சூர்யா
Kanguva Movie: சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்த திரைப்படம் கங்குவா. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்தான் கங்குவா படத்தை தயாரிக்கிறது. மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டு வரும் கங்குவா திரைப்படத்தை 38மொழிகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
சூர்யாவின் கெரியரில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப் போகும் படமாகவும் கங்குவா திரைப்படம் அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப் படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரீலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. அதனால் ரஜினி படத்தோடு எப்படி கங்குவா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என படக்குழு யோசிக்க ஞானவேல் ராஜா ரஜினியின் தீவிர ரசிகரும் கூட.
அவரும் ஒரு பேட்டியில் எப்படி சார் ரஜினியோடு கங்குவா திரைப்படத்தை விடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் கங்குவா படத்தின் தேதியை ரிலீஸ் செய்த பிறகு வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள்.
அதன் பிறகுதான் சூர்யா கங்குவா திரைப்படம் ஒரு குழந்தை மாதிரி. அந்த தேதியில் வேட்டையன் படம் வருவதுதான் சரி என்று பேசியிருந்தார். இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி ரஜினியின் வயதுக்கும் அவருடைய அனுபவத்திற்கும் மதிப்பு கொடுக்குமாதிரியான முடிவு என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.
கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, கோவை சரளா, ஆனந்த்ராஜ், கிங்ஸ்லி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.