latest news
கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் விஜயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… வெளுக்கும் ரசிகர்கள்…
Kanguva: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் தொடர் நெகட்டிவ் விமர்சனங்களை குறித்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு எதிராக தற்போது பிரபல தயாரிப்பாளர் போட்டிருக்கும் பதிவு ஒன்று மீண்டும் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.
ஸ்டுடியோ கிரீன்ஸ் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பு திரைப்படம் கங்குவா. சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படம் வெளியாவதற்கு முன்னர் மிகப்பெரிய அளவு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை படக்குழு உருவாக்கியது.
இதையும் படிங்க: அமரனுக்கு எதிராக 1.1 கோடி இழப்பீடு கேட்டு மாணவர்.. இது என்ன புது பிரச்னையா?
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என ஓப்பனாக அறிவித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட இதே இடத்தில் படத்தின் வெற்றி விழா நடக்கும். நீங்கள் கையில் வைத்திருக்கும் பாசை கொண்டு வந்து அதில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவித்தார். ஆனால் நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை குறித்து வருகிறது.
ஓவர் சத்தத்தால் படம் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் கங்குவா திரைப்படத்தை பார்த்தால் காது காலியாகிவிடும் என கலாய்த்து வருகின்றனர். இதை தொடர்ந்து சூர்யாவின் மனைவி ஜோதிகா, ஞானவேல் மனைவி நேகா என அனைவரும் கங்குவா திரைப்படத்திற்காக ரசிகர்களையும், விமர்சகர்களையும் விமர்சிக்க தொடங்கினர்.
படத்தில் நல்ல விஷயங்களை இல்லையா? மற்ற மொழி படங்களை மட்டும் பாராட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டிருந்தனர். அவர்களையும் ரசிகர்கள் விட்டு வைத்த பாடில்லை. படத்தை சரியாக எடுக்காமல் பார்க்கும் எங்களை கேள்வி கேட்பது எப்படி சரியாகும் எனவும் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா!… வரும் நவம்பர் 27 தீர்ப்பு?!… என்ன ஆக போதோ?…
ஜப்பான் மாதிரி ஒரு படத்தை தயாரித்துவிட்டு நீங்கள் எல்லாம் பேசலாமா? நீங்கள் காசு கொடுத்து ரசிகர்களை பேச வைக்கவில்லையா? என ரசிகர்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களை குறித்து வருகின்றனர். சூர்யா 45 திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிகில் படமும், கைதியும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.