Kanguva: கங்குவா படத்தில் சூர்யா வாங்கிய சொற்ப சம்பளம்… எஸ்கேவிடம் தோற்ற பரிதாபம்…

by Akhilan |   ( Updated:2024-11-15 03:30:16  )
Kanguva
X

#image_title

Kanguva: கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் சம்பளம் பல கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பிரபல நடிகரான சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் சொற்ப கோடியாக மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன்ஸ் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து இருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் பாபிதியோல், திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதையும் படிங்க: பெரிய ஸ்டார்களுக்கு அவ்வளவுதான் ஞானமா?!… சொம்பு தூக்கிங்க அடக்கி வாசிங்க… பொளந்து தள்ளிய பிரபலம்!..

பல வருட எதிர்பார்ப்புக்கு பின்னர் இப்படம் உலகமெங்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்கில் ரிலீஸ் ஆனது. படம் பெரிய வெற்றியை பெற்று 2000 கோடியை வசூல் செய்யும் என படக்குழு ஓவர் எதிர்பார்ப்பில் இருந்தது. அதிலும் ஞானவேல்ராஜா இசை வெளியீட்டு விழாவில் வெற்றிவிழா இங்கு நடக்கும்.

தற்போது இருக்கும் பாஸை அதுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். டிசம்பரில் நாள் சொல்லுவோம் எனப் பேசி இருந்தார். ஆனால் எதிர்பார்ப்பை படம் பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்களுக்கு படம் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. மொத்த படமுமே ஓவர் சத்தமாக கத்திக்கொண்டே இருப்பதாக பல விமர்சனங்கள் குவிந்தது.

முதல் நாளே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் படுபாதாளத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு சம்பளமாக 35 கோடி ரூபாய் மட்டுமே வாங்கி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: Biggboss Tamil: சீசீ… பிக்பாஸில் ஆனந்தி போட்ட ’அந்த’ சப்தம்… இதுவே பசங்க பண்ணா என்ன ஆகிருக்கும்?

ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் என்பதால் முந்தைய படத்தில் இருந்து 15 கோடியை குறைத்து கொண்டாராம். கங்குவா படம் பெரிய வெற்றி பெறும் என்பதால் லாபத்தில் பங்கு வாங்கிக்கொள்ளலாம் என்பதே திட்டமாக இருந்ததாம். ஆனால் தற்போது அது நடப்பது முடியாத காரியமாகி இருக்கிறது.

அமரன் படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கே 30 கோடி கொடுக்கப்பட்டது. அப்படத்தின் அசுர வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் சூர்யாவை முந்திவிடுவார். ஆனால் பல வருடமாக சினிமாவில் இருக்கும் சூர்யா தேவையே இல்லாத ஆசையால் பின்நோக்கி சென்று கொண்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Next Story