எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..

by சிவா |
msv
X

ஒரு திரைப்படத்திற்கான பாடல் உருவாக்கத்தின் பின்னணியில் பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கும். அதுவும் 60,70களில் நடந்ததையெல்லாம் தனி புத்தமாகவே போடலாம். அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த சம்பவங்களில் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது.

கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதியவர். குறிப்பாக பல அற்புதமான காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதி இருக்கிறார். இன்னமும் கண்ணதாசனின் பாடல் வரிகள் காற்றில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதையும் படிங்க: கண்ணதாசன், எம்.எஸ்.வி. இருவரின் ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிய பாடல்… அட செம மாஸா இருக்கே..?

மரணத்தை, காதலையும் கண்ணதாசன் போல யாரும் எழுதியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு ஆழமான, அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்களை எழுதி இருக்கிறார். கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் அழகான கெமிஸ்ட்ரி உண்டு.

அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய சில பாடல்களை கேட்டால் வரிகளுக்காக மெட்டு போடப்பட்டதா இல்லை மெட்டுக்காக பாடல் எழுதப்பட்டதா என்கிற சந்தேகம் வரும். அந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று பிணைந்து பாடல் உருவாகி இருக்கும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..

ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதப்போனார் கண்ணதாசன். எம்.எஸ்.வி. ஒரு டியூன் போட்டார். ஆனால், கண்ணதாசன் எழுதிய வரிகள் அவருக்கு பிடிக்கவில்லை. பாடல் வரிகளை வாங்கி படித்து பார்த்த இயக்குனர் ‘வரிகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதை எப்படி படமாக்குவது என எனக்கு தெரியவில்லை’ என்றார்.

அதற்கு நான் உதவி செய்கிறேன். இந்த பாடலை படத்தில் பயன்படுத்துங்கள். கண்டிப்பாக ரசிகர்களிடம் இப்பாடல் வரவேற்பை பெறும்’ என சொன்னார் கண்ணதாசன். இதை எம்.எஸ்.வியே நம்பவில்லை. ஆனால், அந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதுதான் சிவாஜியின் நடிப்பில் உருவான பலே பாண்டியா படத்தில் இடம் பெற்ற ‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே’ பாடலாகும்.

Next Story