விசு படம் என்றாலே குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து விடுவார்கள். காரணம் எல்லாமே குடும்பக் கதை தான். குடும்பத்தில் நடக்கும் கடும் சிக்கல்களையும், சண்டை சச்சரவுகளையும் பின்னிப் பிணைத்து முடிச்சு போட்டு விடுவார்.
பின்னர் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சுவாரசியமான திருப்பங்களால் லாவகமாக அவிழ்த்து விடுவார். இடையிடையே காமெடி, காதல், பாடல்கள், சென்டிமென்ட் என்று வந்து ரசிகர்களைக் கலகலப்பாக்கும்.
இதையும் படிங்க…வாழ்க்கையில மறக்கமாட்டேன்!.. புலம்பும் கட்டப்பா!… அமாவாசைக்கே அல்வா கொடுத்த இயக்குனர்!..
அந்த வகையில் அவருக்கே ஒரு முறை சோதனை வந்துவிட்டது. அதுவும் கவியரசர் கண்ணதாசனால். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
குடும்பம் ஒரு கதம்பம் படத்திற்குப் பாட்டு வாங்குவதற்காக கண்ணதாசனிடம் செல்கிறார் விசு. படத்தின் கதை முழுவதையும் இன்ச் பை இன்ச்சாக சொல்கிறார். ஆனால் கவியரசரோ தன் நண்பன் எம்எஸ்.விஸ்வநாதனிடம் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இதைக் கவனித்துக் கொண்டே இருந்த விசுவிற்கு எரிச்சலும் கோபமும் வந்து விட்டது.
நாம் இவ்ளோ நேரம் சிரமப்பட்டு கதை சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இவர் கொஞ்சம் கூட கவனிக்காமல் இப்படி அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாரே என்று எரிச்சல் அடைகிறார். கடைசியில் உதவியாளரை அழைத்து இப்படி வரிகளைப் போடுகிறார் கவியரசர்.
‘குடும்பம் ஒரு கதம்பம், பல வண்ணம் பல வண்ணம், தினமும் மதி மயங்கும், பல எண்ணம் பல எண்ணம், தேவன் ஒரு பாதை, தேவி ஒரு பாதை, காலம் செய்யும் பெரும் லீலை…’ அவ்வளவு தான். விசுவிற்கு அளவு கடந்த ஆச்சரியம். மொத்தக்கதையும் வந்துவிட்டதே… என்று. அதுமட்டுமல்லாமல் அவரது சந்தேகத்தையும் தீர்த்து வைத்து இருக்கிறார் விசு.
இதையும் படிங்க…கமல் மூஞ்சு என்ன இப்படி வெந்து போய் கிடக்குது!.. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ஜந்து மாதிரி இருக்காரே!
1981ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், விசு வசனம் எழுதிய படம் குடும்பம் ஒரு கதம்பம். பிரதாப், சுகாசினி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் மகத்தான வெற்றி பெற்றது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…