கடைசி பாடலை எழுதிவிட்டு இளையராஜா பற்றி கண்ணதாசன் சொன்னது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்
Ilayaraja: கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு ஒன்றுக்கு எம்.எஸ்.வி இசையமைத்த பாடலை கேட்டுத்தான் இளையராஜாவுக்குள் பாடல்கள் மீது ஒரு பெரிய ஈர்ப்பே வந்தது. இதை அவரே பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். எம்.எஸ்.வி. பாடல்கள்தான் இளையராஜா சிறுவனாக இருக்கும்போதும், வாலிபனாக இருக்கும்போதும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சிறு வயதிலேயே இசை மீது ஏற்பட்ட ஆர்வத்தில் சில இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார் இளையராஜா. சகோதரர்கள் வெங்கட்பிரபு மற்றும் பாஸ்கருடன் இணைந்து பாடல்களுக்கான டியூனை உருவாக்குவது, அதற்கு பாடல் வரிகளை எழுதுவது என செய்து வந்தார்.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பாட்டா?!.. இளையராஜாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய இயக்குனர்!..
மேலும், கம்யூனிச கூட்டங்கள் பலவற்றிலும் இளையராஜாவின் கச்சேரி இடம் பெற்றது. ஒரு கட்டத்தில் சென்னை சென்று இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை என்பது அவருக்கு தெரிய வந்தது. எனவே, சிலரிடம் சென்று இசையை முறையாக கற்றுக்கொண்டார்.
அதன்பின் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்தார். அது அவருக்கு சினிமா இசையை கற்றுக்கொள்ள பெரிதும் உதவியது. பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டார். ஆனால், யாரும் அவரை நம்பவில்லை. சில இயக்குனர்கள் அவரின் டியூனை கேட்டு ‘இதெல்லாம் ஒரு பாட்டா?’ என நக்கலடித்த சம்பவங்களும் நடந்தது.
இதையெல்லாம் மீறியே அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கோலிவுட்டின் முக்கிய இசையமைப்பாளராக மாறினார். 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் வெளிவந்தது. அவரின் இசை இல்லை என்றால் படமே இல்லை என்கிற நிலையே உருவானது.
இவரின் இசையில் கவிஞர் கண்ணதாசனும் சில பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான பாடல் கமல் - ஸ்ரீதேவி இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற ‘கண்ணே கலைமானே கன்னி மயிலென’ பாடல் முக்கியமானது. இதுபற்றி ஊடகமொன்றில் பேசிய இளையராஜா ‘அந்த பாடலை எழுதி முடித்தபின் அருகில் இருந்த அவரின் உதவியாளரிடம் கண்ணதாசன் ‘இளையராஜா அதிர்ஷ்டக்காரர்’ என சொன்னார்.
‘ஏன் அப்படி சொல்கிறீர்கள்?’ என உதவியாளர் கேட்டதற்கு ‘இதுதான் நான் சினிமாவிற்காக எழுதும் கடைசிப்பாடல். இனிமேல் நான் பாடல்களை எழுத மாட்டேன். அதனால்தான் அப்படி சொன்னேன்’ என சொன்னார். அப்படி சொல்லிவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக போனவர் மரணமடைந்து சென்னை வந்தார்’ என இளையராஜா சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: இளையராஜா மீது அவ்ளோ வெறுப்பு…. அந்த வார்த்தையை சொல்லி அதிர வைத்த தபேலாகாரர்..!