கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.. கோபத்தை கண்ணதாசன் பாட்டில் எப்படி காட்டினார் தெரியுமா?...

by சிவா |
kannadasan
X

kannadasan

கவிஞர்கள் கொஞ்சம் குசும்பு பிடித்தவர்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தங்களின் சொந்த பிரச்சனையை பாடல்களில் காண்பிப்பது, மறைமுகமாக ஒருவரை கிண்டலடிப்பது, தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொள்வது என பல வேலைகளை சில சமயம் பாடலாசிரியர்களும், கவிஞர்களும் திரைப்பட பாடல்கள் எழுதும்போது செய்வார்கள். ஆனால், அதை பலராலும் கண்டுபிடிக்கவே முடியாது.

கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். இவரின் பாடல் வரிகளுக்கு என ரசிகர்களே இருந்த காலம் அது. எல்லா நடிகர்களுக்கும் கண்ணதாசன் பாடல் எழுதினாலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு பல நூறு பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.

kannadasan

kannadasan

ஒருமுறை காமராஜருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்தனர். அப்போது ஒரு திரைப்படத்தில் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என எழுதியிருந்தார். காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி. எனவே, அதை வைத்தே பாடல் எழுதினார். இதுபோல் பல சந்தர்ப்பங்களை கண்ணதாசன் தனக்காக பயன்படுத்திக்கொண்டவர்.

சிவாஜி நடித்த ‘அவன்தான் மனிதன்’ படத்திற்கு எல்லா பாடல்களையும் கண்ணதாசன் எழுதுவது என முடிவானது. ஆனால், பாடல்களை எழுதி கொடுக்க கொஞ்சம் தாமதம் ஆனது. 1971ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. எனவே, படத்தின் தயாரிப்பாளர் கண்ணதாசனிடம் மே மதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. பாட்டை எழுதி கொடுங்கள் என தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தாராம். கண்ணதாசனை பார்க்கும்போதெல்லாம் ‘மே மாதம்’ படப்பிடிப்பு என அவருக்கு தயாரிப்பாளர் நினைவுபடுத்திக்கொண்டே இருந்துள்ளார்.

avanthan

avanthan

இதில் கடுப்பான கண்ணதாசன் ஒருநாள் படத்திற்கான 5 பாடல்களையும் எழுதிக்கொடுத்துள்ளார். அதோடு, தயாரிப்பாளரிடமும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் இதில் ஒரு பாடலை கவனமாக படியுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இருவரும் படித்துபார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் எல்லா பாடல்களும் இருப்பதாகவே தயாரிப்பாளர் உணர்ந்துள்ளார். ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதன் கண்டுபிடித்துவிட்டார்.

அதாவது அடிக்கடி மே மாதம் படப்பிடிப்பு என நச்சரித்ததால் ஒரு பாடலில் ‘அன்பு நடனாடும் கலைக்கூடமே..ஆசை மழை மேகமே, எழில் வண்ணமே, தமிழ் மன்றமே’ என பாடலின் எல்லா வரியிலும் ‘மே’ என்கிற எழுத்து முடிவதுபோல் எழுதி தனது கோபத்தை கூட கவித்துவமாகவே காட்டியிருந்தார் கண்ணதாசன்.

இதையும் படிங்க: “விதி தன்னோட வேலைய காமிச்சிருச்சி”… வடிவேலுவை வம்புக்கு இழுக்கும் பிரபல காமெடி நடிகர்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!

Next Story