Cinema History
நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..
50,60 களில் தமிழ் சினிமா இசையில் பல அர்த்தமுள்ள, கருத்துள்ள, கவித்துவமான பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பல திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட பலருக்கும் பல நூறு பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.
இவர் காதலையும், கண்ணீரையும் கண்ணதாசன் பாடியது போல் யாரும் பாடவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான் காலங்கள் தாண்டியும் கண்ணதாசனின் பாடல்கள் இப்போதும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கண்ணதாசனின் ஆழமான, அர்த்தமுள்ள பாடல் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கோபத்தை சம்பவத்தைத்தான் இங்கே பார்க்கபோகிறோம்.
இதையும் படிங்க: சொந்த மகன்களுக்கே கிடைக்காத ஒரு கௌரவத்தை ரஜினிக்கு கொடுத்த சிவாஜி! பதறி போய் திகைத்த சூப்பர் ஸ்டார்
ஒரு பாடல் காலம் கடந்து நிற்க வேண்டுமெனில் 4 விஷயங்கள் மிகவும் முக்கியம். ஆழமான அர்த்தமுள்ள பாடல் வரிகள், அந்த வரிகளுக்கு ஏற்ற இசை… அதை புரிந்து கொண்டு பாடும் பாடகர்.. கடைசியாக அந்த பாடலின் உருவாக்கம். 1977ம் வருடம் வெளியான திரைப்படம் ‘அவன் ஒரு சரித்திரம்’. இந்த படத்தில் சிவாஜி, மஞ்சுளா, காஞ்சனா, பண்டரிபாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்காக ‘அம்மானை அழகுமிகு கண்மானை’ என்கிற பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த பாடலை டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். அம்மானை என்றால் படத்தின் கணக்குபடி அந்த மானை.. அடுத்து அந்த காலத்தில் பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு, இன்னொன்று அம்மானை என்றால் வழிபாடு, மற்றொன்று.. அம்மானை என்றால் தாய் மாமனை குறிக்கும் ஒரு சொல் என அந்த வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பில் சந்தேகப்பட்டு சத்யராஜ் கேட்ட கேள்வி! பதிலை கூறி அசரவைத்த திலகம்
இப்படி அந்த பாடலில் அடுத்தடுத்து வரும் பல வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள் வரும்படி கண்ணதாசன் எழுதியிருந்தார். அதாவது ஒரு தரமான இலக்கி்யத்தை அந்த பாடலில் அசால்ட்டாக கண்ணதாசன் படைத்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனும் அந்த பாடலுக்கு சிறப்பாக இசையமைக்க, டி.எம்.எஸ் தன் பங்குக்கு சிறப்பாக பாடிவிட்டார்.
ஆனால், இப்படத்தை எப்படி படமாக்குவது என படக்குழு யோசித்தது. ஒரு பூங்காவில் சாதாரணமாக இப்பாடலை எடுக்க திட்டமிட்டனர். இது சிவாஜிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கண்ணதாசன் எவ்வளவு ஆழமாக இந்த பாடலை எழுதியுள்ளார்!, மற்ற எல்லோரும் அவர்களின் வேலையை சிறப்பாக செய்துள்ளனர். எனவே, இப்பாடலை நன்றாக படமாக்காமல் கெடுத்து விடாதீர்கள் என சொன்னாராம்.
ஆனால், அவர்களோ வாங்க பாத்துக்கலாம் என சொல்லி அவரை சம்மதிக்க வைத்து அவர்கள் நினைத்தது போலவே மிகவும் சாதாரணமாக அப்பாடலை படம் பிடித்துள்ளனர். இறுதியில் அந்த பாடலை பார்த்த சிவாஜிக்கு அதை எடுத்த விதம் பிடிக்காமல் இயக்குனரை கடிந்து கொண்டாராம்.
இதையும் படிங்க: சிவாஜியை வைத்து படம் எடுத்தேன்.. எம்.ஜி.ஆரை வைத்து பணம் எடுத்தேன்!. சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?..