இந்த பாட்டை நான்தான் பாடுவேன்!.. கண்ணதாசன் அடம்பிடித்த பாடல் எது தெரியுமா?...

by சிவா |   ( Updated:2024-03-21 08:36:20  )
sivaji kannadasan
X

கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், நடிகர் என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர் கண்ணதாசன். சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டே சிறுகதைகளை எழுதி வந்தார். நாடோடி மன்னன் படத்தில் கூட இவர் வசனம் தொடர்பான பணிகளில் உதவி செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் என 60களில் பிரபலமாக இருந்த எல்லா ஹீரோக்களின் படங்களிலும் பாடல்களை எழுதி இருக்கிறார். குறிப்பாக காதல் மற்றும் தத்துவ பாடல்களை கண்ணதாசனை போல யாரும் எழுதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: காதலே காதலே என்னை உடைத்தேனே… கண்ணில் காதல் பொங்க மனைவியுடன் அஜித்… லீக் வீடியோ!

கண்ணதாசன் மரணத்தையும், சோகத்தையும், துக்கத்தையும் எழுதியது போல எந்த பாடலாசிரியருமே எழுதவில்லை. அவரின் பாடல்கள் இப்போது மரணம் நிகழ்ந்த கிராமங்களில் ஒலித்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, உடலை அடக்கம் செய்ய இறுதி ஊர்வலம் செல்லும்போது கண்ணதாசன் எழுதிய ‘வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி’ பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அதாவது தனது பாடல் வரிகள் மூலம் கவிஞர் கண்ணதாசன் இன்னமும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். எம்.எஸ்.வி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பாடல்களை அதிகம் பாடியது டி.எம்.சவுந்தரராஜன் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

கண்ணதாசனின் இசையில் சிவாஜிக்கு அமைந்த தத்துவ பாடல்கள் வேறு எந்த நடிகருக்கும் அமைந்திருக்கும் என சொல்ல முடியாது. சிவாஜி நடிப்பில் 1961ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் பாவ மன்னிப்பு. இந்த படத்தில் சிவாஜியுடன் ஜெமினி கணேசன், சாவித்ரி, தேவிகா என பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை.. மனிதன் மாறிவிட்டான்’ என்கிற பாடலை சிவாஜி சைக்கிளை ஓட்டிக்கொண்டே பாடுவார். இந்த பாடலை எழுதி முடித்ததும் கவிஞர் கண்ணதாசன் ‘நானே இந்த பாடலை பாடுகிறேன்’ என அடம்பிடித்திருக்கிறார். ஆனால், ‘உங்கள் குரல் சிவாஜிக்கு செட் ஆகாது.. நீங்கள் பாடினாலும் சரியாக வராது’ என சொல்லி டி.எம். சவுந்தரராஜனை பாடவைத்தார் எம்.எஸ்.வி.

Next Story