எம்.ஜி.ஆரின் அரசியலை விமர்சித்த கண்ணதாசன்... அதுக்கு புரட்சித்தலைவர் கொடுத்த பதிலடியைப் பாருங்க..!

by sankaran v |
MGR Kdn
X

MGR Kdn

கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் என்றால் அது எவர்கிரீன்தான். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி என இரு இமயங்களுக்கும் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. அதே நேரம் இவர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்றும் சொல்லலாம். கண்ணதாசனைப் பொருத்தவரை அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை தயங்காமல் சொல்பவர்.

எம்ஜிஆர் விஷயத்திலும் அப்படி நடந்தது. அரசியலில் எம்ஜிஆர் காலடி எடுத்து வைத்ததும் ஜெயித்து ஆட்சியை அமைத்தபோது அவர் மீது கண்ணதாசன் நிறைய விமர்சனங்களை முன்வைத்தாராம். அதற்கு எம்ஜிஆர் என்ன பதில் சொன்னார் என்பதை கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

MGR KDN

MGR KDN

எம்ஜிஆர் அரசியல்ல ஜெயித்து ஆட்சிக்கு வந்துட்டாரு. அப்போ அப்பா அவரு மீது நிறைய விமர்சனங்கள் பண்றாரு. எம்ஜிஆரும் அதுக்குப் பதிலடி கொடுத்துக்கிட்டு இருக்காரு. ஒரு கட்டத்துக்கு மேல இவரு நல்லா தானா பண்ணிக்கிட்டு இருக்காரு. நாம எதுக்கு தப்பு தப்பா பேசறோம்கற எண்ணம் வந்துடுச்சு. இல்ல நான் கூட தப்பா நினைச்சேன். ஒரு நடிகனால இப்படி எல்லாம் பண்ண முடியுமான்னு...! நிச்சயமா நல்லா பண்ணிக்கிட்டு இருக்காரு எம்ஜிஆரு.

அப்பாவைப் பத்தி எம்ஜிஆருக்குத் தெரியும். எம்ஜிஆர், கண்ணதாசன், சிவாஜி, கருணாநிதி 4 பேரும் ஒண்ணா சுத்துனவங்க. 77ல எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தாரு. 78ல அண்ணன் கல்யாணம். எம்ஜிஆர் வர்றாருன்னதும் கலைஞர் அந்த நேரத்தைக் கேட்டுட்டு அதுக்கு முன்னாடி வந்துட்டுப் போயிட்டாரு. அப்புறம் எம்ஜிஆர் கரெக்ட் டைமுக்கு வந்தார். நின்னு எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தாரு. அங்க தான் அப்பாகிட்ட சொல்றாரு. 'அரசவைக் கவிஞரா உன்னை ஆக்கப் போறேன்'னு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... கோட் படத்துல விஜயகாந்துக்கு இந்த ரோலா? அவரே டபுள் ஓகே சொல்லிட்டாரே..!

அதுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர். தன்னை விமர்சித்தாலும் கூட அவரையும் கௌரவித்து அழகுபார்ப்பார் அந்தத் தன்மானத் தலைவர். அதனால் தான் மக்கள் மனதில் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

Next Story