கோபப்படுத்திய இயக்குனர்!. கடுப்பில் 58 பல்லவிகளை எழுதி கொடுத்த கண்ணதாசன்!.. அட அந்த படமா?!..

50,60 களில் பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் சரித்திர படங்களுக்கு கதை வசனமும், பாடல்களையும் எழுதியிருக்கிறார். சிவாஜிக்கு பல காதல், சோக மற்றும் தத்துவ பாடல்களை எழுதியிருக்கிறார். அச்சம் என்பது மடமையடா, உன்னை அறிந்தல் நீ உன்னை அறிந்தால் போன்ற கருத்துமிக்க பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.
ஏவிஎம் தயாரிப்பில் 1960ம் வருடம் வெளியான திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, பாலையா என பலரும் நடித்திருந்தனர். உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தை பீம் சிங் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: இருபது நிமிட சீனை மூன்றே நிமிட பாடலில் சொன்ன கண்ணதாசன்.. படக்குழுவையே வியப்பில் ஆழ்த்திய கவியரசர்..
திரைப்படங்கள் தயாரிப்பதில் ஏவிஎம் ஒரு புகழ் பெற்ற நிறுவனமாகும். களத்தூர் கண்ணம்மா படம் உருவான போது மெய்யப்ப செட்டியார் தொழிலை தனது மகன்கள் முருகன், சரவணன், குகன் ஆகிய மூன்று மகன்களிடமும் ஒப்படைத்திருந்தார். எனவே, தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. படம் தோற்றுவிட்டால் செட்டியாரின் மகன்களுக்கு தொழில் தெரியவில்லை என சொல்லிவிடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது.
எனவே, ஒவ்வொரு விஷயத்தில் தலையிட்டனர். முதலில் இப்படத்தை இயக்க தெலுங்கு பட இயக்குனர் பிரகாஷ் ராவ் நியமிக்கப்பட்டார். முருகன் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுவது அவருக்கு பிடிக்கவில்லை. நாம் இயக்குனரா, இல்லை இவர் இயக்குனரா என்கிற கோபத்தில் இருந்தார்.
இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..
அப்போது அப்படத்திற்கு பாடலை எழுத கண்ணதாசன் வந்திருந்தார். இயக்குனர் சூழ்நிலையை சொன்னதும் கவிஞர் ஒரு பல்லவியை எழுதி கொடுத்தார். அதை படித்து பார்த்த முருகன் இது வேண்டாம். வேறு எழுதிக்கொடுங்கள் என கேட்க கண்ணதாசனும் எழுதி கொடுத்தார். இப்படி பல பல்லவிகள் சொல்லியும் அவருக்கு பிடிக்கவில்லை. இறுதியில் ஒன்றை தேர்ந்தெடுத்தார்.
ஆனால், தனது கெத்தை காட்ட நினைத்த பிரகாஷ் ராவ் அந்த வரிகளை வாங்கி பார்த்து எனக்கு இது பிடிக்கவில்லை. வேறு எழுதுங்கள் என சொல்ல கண்ணதாசனும் எழுதி எழுதி கொடுக்க அவர் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இவர்கள் இருவருக்குமுள்ள ஈகோ பிரச்சனையில் நாம் சிக்கிவிட்டோம் என கண்ணதாசன் புரிந்துகொண்டார்.
இதையும் படிங்க: கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்…
உடனே ஒரு பேப்பரை எடுத்து கடகடவென எழுதி அவர்களின் கையில் கொடுத்தார். அதில் மொத்தம் 58 பல்லவிகளை எழுதியிருந்தார். இதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். வாங்கி படித்து பார்த்தால் எல்லாமே சிறப்பாக இருந்தது. அதன்பி ஏவிஎம் சரவணனும் வந்து எல்லோரும் சேர்ந்து 10 பல்லவிகளை தேர்ந்தெடுத்து அதையே முழுப்பாடலாக வைத்து விட்டனராம்.
அப்படி வெளிவந்த பாடல்தான் ‘அருகில் வந்தாள்.. உருகி நின்றாள் அன்பு தந்தாளே’ . சாவித்ரி தன்னை விட்டு போனதால் ஜெமினி கணேசன் குடித்துவிட்டு பாடுவது போல் இந்த காட்சியை படம்பிடித்தனர். பிரகாஷ் ராவ் ஒரு கட்டத்தில் இப்படத்திலிருந்து விலக பீம்சிங் இப்படத்தை இயக்கி முடித்தது குறிப்பிடத்தக்கது.