Connect with us
msv

Cinema History

இரண்டு மணி நேரம் ட்யூன் போட்ட எம்.எஸ்.வி.. திணறிய சுஜாதா!.. 2 நிமிடத்தில் பாட்டெழுதிய கண்ணதாசன்…

திரையுலகில் இசையமைப்பாளர்கள் – பாடலாசிரியர்கள் கூட்டணி சரியாக அமைந்தால் மட்டுமே பாடல்கள் சிறப்பாக இருக்கும். என்ன சூழ்நிலையில் இந்த பாடல் வருகிறதை என்பதை புரிந்து இசையமைப்பாளர் மெட்டு அமைக்க வேண்டும். அதேபோல், பாடலாசிரியரும் அதை புரிந்து கொண்டு பாடல் வரிகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் அது அந்த திரைப்படத்திற்கு பொருத்தமான பாடலாக அமையும்.

கருப்பு வெள்ளை காலம் முதல் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் கோலோச்சியுள்ளனர். அதில் முக்கியமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் ராமமூர்த்தி என்பவருடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தனியாகவும் பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரின் பாடல்களுக்கு வாலி உள்ளிட்ட பலரும் பல சிறப்பான பாடல்களை எழுதியுள்ளனர்.

Kannadasan and MSV

Kannadasan and MSV

ஆனால், எம்.எஸ்.வி – கண்ணதாசன் கூட்டணியில் ரசிகர்களின் மனதை மயக்கும், காலத்தையும் தாண்டி நிற்கும் பல பாடல்கள் வெளிவந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி என பெரிய ஜாம்பாவான்களுக்கு சோகம், தத்துவம் எனில் பாடல் எழுத கண்ணதாசனைத்தான் அழைப்பார்கள். சில பாடல்களை எம்.எஸ்.வி பல மணி நேரங்கள் எடுத்து உருவாக்கினால், கண்ணதாசன் மிகவும் குறைவான நேரத்தில் பாடல்களை எழுதிவிடுவாராம்.

பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்து 1979ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்த திரைப்படம் நினைத்தாலே இனிக்கும். இந்த படத்திற்கு பாலச்சந்தருடன் இணைந்து எழுத்தாளர் சுஜாதா திரைக்கதை அமைத்திருந்தார். இப்படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட்.

song

song

இப்படத்தில் இடம் பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ பாடலுக்கான டியூனை உருவாக்க எம்.எஸ்.வி இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டாராம். அப்போது அங்கிருந்த எழுத்தாளர் சுஜாதா அதற்கு பாடல் எழுத முயற்சி செய்தாராம். அவரும் என்னென்னவோ யோசித்தும் அவருக்கு வரிகள் வரவில்லை. அப்போது அங்கு வந்த கண்ணதாசன் இரண்டு நிமிடத்தில் பாடல் வரிகளை கூறினாரம். இது எப்படி சாத்தியம் என கண்ணதாசனிடம் சுஜாதா கேட்க ‘கம்ப ராமாயணம் படியுங்கள். எந்த இடத்தில் எந்த வரிகளை போட வேண்டும் என்பது உங்களுக்கு புரியும் என சொன்னாராம் கண்ணதாசன்.

இதையும் படிங்க: இதுவே பத்து நாளைக்கு தாங்கும்!.. வி சேஃபில் மொத்த அழகையும் காட்டும் கியாரா….

google news
Continue Reading

More in Cinema History

To Top