Cinema History
வாலி எழுத வேண்டிய பாடலை எழுதிய கண்ணதாசன்!. போட்டியாளரை வாழவைத்த கவிஞரின் நட்பு!..
எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனின் ஆதிக்கத்தில் தமிழ் திரையுலகம் இருந்து வந்த காலத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு புகழோடு வாழ்ந்து வந்தவர் கவிஞர் கண்ணதாசன். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இருவரும் ஆளுமைகளாக திகழ இவர் எழுதிய பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தது.
இப்படிப்பட்ட தனி திறமையை கொண்டிருந்த கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்த ‘இது சத்தியம்’ திரைப்படத்துல் பாடல்களை எழுதிக்கொண்டிருக்க, அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் கவிஞர் வாலி எழுதினால் நன்றாக இருக்கும் என இசையமைப்பாளர் எம்.எஸ்.வி விரும்பினார்.
இதையும் படிங்க: இவருக்கு பாட்டு எழுத வராது!.. ஊருக்கு போக சொல்லுங்க!.. வாலியை நக்கலடித்த இசையமைப்பாளர்!…
ஆனால் கவிஞர் கண்ணதாசனே அந்த பாடலை எழுதி கொடுத்தும் விட்டார். ‘சரவண பொய்கையில் நீராடி’ என்ற அந்த பாடல் இன்றும் காதுகளில் ஒலிக்கும் அளவிற்கு சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் வெளியானபின் திரைக்கு பின்னால் பரம எதிரிகளாக பார்க்கப்பட்ட கண்ணதாசனும், வாலியும் நிஜவாழ்வில் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வந்தனர்.
தனது நணபனின் திறமை ஒரே ஒரு பாடலுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர் அடைக்கப்பட்டுவிடக்கூடாது என எண்ணிய கண்ணதாசன் எஞ்சிய ஒரு பாடலை அவரே எழுதியதோடு மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன “படகோட்டி” படத்தில் தனக்கு வந்த வாய்ப்பை கவிஞர் வாலிக்கு விட்டுக்கொடுத்தார்.
இதையும் படிங்க: வாலியை பார்த்தாலே சிவாஜி பாடும் அந்த பாடல்!… அந்த அளவுக்கு பிடிக்க காரணம் இதுதானாம்!..
ரசிகர் பலம் அதிகம் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். படத்தில் பணியாற்ற வந்த வாய்ப்பை தனது நண்பனுக்காக விட்டுகொடுத்த அவரின் பெருந்தன்மை அன்றைய காலகட்டத்தில் அவர்களது நட்பிற்கு சான்றாக பார்க்கப்பட்டது. மேலும் அந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைய படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வறவேற்பைபெற வாலியினுடைய புகழ் மேலும் உயரத்துவங்கியது.
தனக்கு போட்டி என பார்க்கப்பட்ட சக கவிஞரின் திறமை வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல மனம் கண்ணதாசனை ரசிகர்களின் மனதில் வேறு ஒரு இடத்திற்கும் எடுத்துச்சென்றது அன்றைய காலகட்டத்தில்.