அவனை ஒரு அடியாவது அடிக்கணும்... கண்ணதாசனை அடிக்க பாய்ந்த சிவாஜி கணேசன்

by Akhilan |   ( Updated:2022-10-16 08:33:56  )
சிவாஜி கண்ணதாசன்
X

சிவாஜி கண்ணதாசன்

எப்போதுமே அமைதியாக இருக்கும் சிவாஜி கணேசனையையே கவிஞர் கண்ணதாசன் வெகுண்டு எழ செய்த சம்பவம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

தமிழ்நாட்டை 1956-ம் ஆண்டு புயல் தாக்கியது. இதற்காக நிதி சேகரிக்க திராவிட கழகத்தினரை அண்ணா கேட்டு கொண்டார். அப்போது சிவாஜி கட்சியில் இல்லை என்றாலும் அண்ணா மீது கொண்ட பாசத்தால் அவரும் நிதி திரட்டினார். தெருவாக அலைந்து பராசக்தி வசனங்களை எல்லாம் பேசி அப்போது அதிக நிதியை திரட்டியவர் சிவாஜி. அதை அண்ணாவிடம் சேர்த்து விடும்படி கொடுத்து விட்டு சேலம் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

அதிக நிதி திரட்டியவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழாவினை அண்ணா நடத்தினார். அதில் சிவாஜிக்கு மட்டும் அழைப்பு வரவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் அன்று வரை தனக்கு அழைப்பு வரும் என நினைத்த சிவாஜி ஏமாந்து போனார். இது அவரின் மனதினை வெகுவாக பாதித்தது. ஆனால், நிகழ்ச்சியில் சிவாஜிக்கு பதில் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யப்பட்டது. தன்னை ஒதுக்கியதை சிவாஜி அவமரியாதையாக கருதினார். இதனால் அவர் மனநிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சில காலம் யாருடன் பேசாமல் இருந்தார். இதைக் கேள்விப்பட்ட இயக்குநர் பீம்சிங், சிவாஜியை அவரது வீட்டுக்கே போய் சந்தித்தார்.

அத்தோடு, கணேசா வா திருப்பதி கோயிலுக்குப் போய்ட்டு வரலாம். மனது கொஞ்சம் அமைதியடையும் என்று அழைத்தார். கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்த திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டு கோயிலுக்குப் போய்விட்டு வந்தால், என்ன சொல்வார்களோ என சிவாஜி தயங்கினார். ஒரு கட்டத்தில் பீம்சிங்கின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து காரில் திருப்பதி கிளம்பினார். அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்தது, எப்படியோ பத்திரிகைகளில் செய்தியாகக் கசிந்தது.

கண்ணதாசன்

கண்ணதாசன்

இதில் சிவாஜியினை மோசமாக தனது பத்திரிக்கையில் விமர்சித்தார் கவிஞர் கண்ணதாசன். விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் சிவாஜி படுகுழியில் புதைந்திருப்பதைப் போன்று ‘தெனாலிராமன்’ படத்தின் புகைப்படத்தைப் பத்திரிகையிலே வெளியிட்டார். அதற்குப் பக்கத்திலே “கணேசா இதுதான் உன்னுடைய எதிர்காலமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் சிவாஜிக்கு கோபம் அதிகரித்தது.

இதையும் படிங்க: திருப்பதி போன கணேசா திரும்பிப் போ… நடிகர் சிவாஜி கணேசனுக்கு நேர்ந்த அவமானம்…

இந்நிலையில், வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் சிவாஜி இருந்தார். இதை அறியாத கண்ணதாசனும் அங்கு வந்தார். அவர் வருவதை அறிந்த சிவாஜி, வேகமாக அவரினை நெருங்கினார். அவரை அடிக்கவும் பாய்ந்தார். ஆனால், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவரை மறித்தார். இதில் கடுப்பான சிவாஜி என்னை விடு ஒரு அடியாவது அவனை அடிக்காமல் என் மனம் ஆறாது என்று குமுறினார்.

என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் இச்செய்தி காட்டுத் தீப்போல சினிமா வட்டாரத்தில் பரவியது. சிவாஜி கண்ணதாசன் விவகாரத்தினால் கண்ணதாசனை தயாரிப்பாளர்கள் பலரே ஒதுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story