முதல்வரே காக்க வைக்காத கண்ணதாசன்... சந்திரபாபு வீட்டு வாசலில் காத்துக்கிடந்த கொடுமை...
தமிழக முதல்வரே சந்திக்க நேரம் கொடுத்து காக்க வைக்காமல் பார்க்கும் கண்ணதாசனை நடிகர் சந்திரபாபு பார்க்காமல் அலைக்கழித்த சம்பவம் குறித்த தகவல்கள் தெரியுமா?
நடிகருக்கு எத்துணை பெரிய திறமை இருந்தாலும் ஆணவம் அவரை அழித்து விடும். இது சந்திரபாபுவிற்கு தான் பொருந்தம். அவரின் அந்த திறமை எல்லாம் அவர் கொண்ட திமிரினாலே அழிந்து விட்டது என கண்ணதாசன் தனது நூலில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. கண்ணதாசன் தயாரிப்பில் வெளிவந்த படம் கவலை இல்லாத மனிதன். இப்படத்தில் சந்திரபாபு, நடிகவேள் எம்.ஆர்.ராதா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
படப்பிடிப்புகளும் நடந்து கொண்டிருந்தது. ஒருமுறை சந்திரபாபுவினை அழைத்து செல்ல தனது காரில் கண்ணதாசன் வாசலில் காத்திருந்தார். இரண்டு மணி நேரம் சென்றும் அவர் வராமல் போகவே உள்ளிருந்த அவரின் உதவியாளரை அழைத்து கேட்க அவர் பின்வாசலின் வழியாக சென்று விட்டாரே எனக் கூறினாராம். இதனால் கண்ணதாசன் சற்று கடுப்பானார்.
இதையும் படிங்க: சாவித்திரியை கண்டபடி திட்டிய கண்ணதாசன்… போண்டியாகும் வேளையில் படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்… அடப்பாவமே!!
இருந்தும், படப்பிடிப்புக்கு தானே சென்று இருப்பார் என அங்கு அழைத்து பேசி இருக்கிறார். ஆனால் அவர்களோ இங்கு வரவில்லை. அவருக்கு தான் காத்திருப்பதாக கூறி இருக்கின்றனர். இதனால் பெரிதும் நிலைகுலைந்திருக்கிறார். தன்னை காக்க வைத்தது மட்டுமல்லாமல், படப்பிடிப்புக்கும் போகாமல் இருக்கிறாரே எனக் கவலை கொண்டார்.
அங்கிருந்து ஸ்டுடியோவிற்குப் போன அவர் எம்.ஆர்.ராதாவிடம் இதை சொல்லி அழுதிருக்கிறார். என் நண்பர் முதல்வர் கருணாநிதியை காண கூட முன் அனுமதி வாங்கி காத்திருக்காமல் பார்ப்பேன். ஆனால், சந்திரபாபுவிற்காக அவர் வீட்டில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன். அவரோ ஒரு வார்த்தை சொல்லாமல் பின் வாசல் வழியாக சென்றுவிட்டார் எனக் கூறினார். இதை அப்படியே ‘எனது சுய சரிதம்’ என்ற புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.
இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தினால் அவருக்கு பெரிய கடன் உருவானது. தொடர்ந்து, தனது மொத்த சொத்தினை விற்றுவிட்டாராம். கடைசி வரை அவர் பாடிய பாடல் எல்லாம் கடனுக்கும் வட்டிக்குமே சென்றது குறிப்பிடத்தக்கது.