கண்ணதாசனுக்கு தட்டிய பொறி!... அத்தனை ராமன்களும் வரிசையாக வந்துட்டாங்க... என்ன பாடல்னு தெரியுமா?..
கவிஞர்களுக்கு எல்லாம் சிறு பொறி தட்டினால் போதும். வார்த்தைகள் மழையாக வந்து பொழிந்து விடும். அப்படித் தான் கண்ணதாசன் விஷயத்திலும் ஒரு முறை நடந்தது. வாங்க அது என்னன்னு பார்க்கலாம்.
ராமன் எத்தனை ராமனடி என்ற பாடல் அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டிகளில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் தான் இந்தப் பாடல் வருகிறது. இது எப்படி உருவானதுன்னு தெரியுமா?
இதையும் படிங்க... கோட் இரண்டாவது சிங்கிள் எப்போ தெரியுமா? விசில் போடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
தெலுங்கு கவிஞர் ஆருத்ராவும், கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் அவ்வப்போது தாங்கள் எழுதும் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொள்வார்களாம். அந்த வகையில் கவிஞர் ஆருத்ராவை கண்ணதாசனின் அந்தப் பாடல் ரொம்பவே ஈர்த்து விட்டதாம். இந்தப் பாடலுக்கான கருவை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணதாசன் சொன்ன பதில் இதுதான்.
ராமாயணத்தில் பட்டாபிஷேகம் படலத்திற்குப் பிறகு வரும் 2ம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொல்லிவிட்டார் என்பதற்காக ராமன் சீதையைக் கொண்டு போய் காட்டில் விட்டு விடும்படி தம்பி லட்சுமணனிடம் உத்தரவிடுகிறான். அண்ணன் சொன்னதைத் தட்டாமல் செய்து விட்டு தம்பி திரும்பி வருகையில் ராமனோ வீட்டு நிலைப்படியில் தலையை சாய்த்து அழுது கொண்டு இருப்பானாம்.
அப்போது லட்சுமணன் அண்ணனைப் பார்த்து ஏன் அண்ணா அழுகிறீர்கள்? நீங்கள் தானே ஆணையிட்டீர்கள் என்று கேட்டானாம். அதற்கு ராமன் சொன்னது தான் ஹைலைட். ஆணையிட்டது கோசலராமன். அழுது கொண்டு இருப்பது சீதாராமன் என்று. அந்த சம்பவம் தான் கண்ணதாசனுக்கு இந்தப் பாடலையும் எழுத பொறி தட்டக் காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க... ராமராஜன் கொடுத்த லவ் லெட்டர்! பொக்கிஷமாக வைத்திருக்கும் நளினி.. என்ன எழுதியிருக்கார் தெரியுமா
அந்தப் பாடலில் தான் இந்த ராமன்கள் எல்லாம் வரிசைகட்டி வருகிறார்கள். கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன், காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன், அரசாள வந்த மன்னன் ராஜாராமன், அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன், தாயே என் தெய்வம் என்ற கோசலராமன், தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன், வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன் வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்... இன்னும் முடியவில்லை.
அடுத்து வம்சத்துக்கொருவன் ரகுராமன், மதங்களை இணைக்கும் சிவராமன், மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன், முடிவில்லாதவன் அனந்தராமன் என பாடலில் அழகழான ராமன்கள் பவனி வருகின்றனர். இந்தப் பாடலைக் கேட்கும்போதே நமக்குள் ஒரு இனம்புரியாத இன்பம் வந்து விடுகிறது. உண்மையிலேயே கவியரசர் என்றால் கவியரசர் தான்.