போதை ஊசி போட்டு சூட்டிங் வராம தயாரிப்பாளருக்கு தொல்லை கொடுத்த கார்த்திக்... அட அது அந்த படத்துக்கா?

Karthick
நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார் என்று சொல்வார்கள். அதனால் தான் அவர் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி ஒரு அதிர்ச்சியான விஷயத்தைத் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போம்.
1991ல் மலையாளத்தில் சூப்பர்ஹிட் படமான 'பாரதம்' என்ற படத்தை தமிழில் எடுக்க நினைத்தார். சிபிமலயில் இயக்கி இருந்தார். மோகன்லால், ஊர்வசி, நெடுமுடி வேணு உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தைத் தமிழில் எடுக்க நினைத்தார் இயக்குனர் P.வாசு. அதுதான் சீனு படம். கார்த்திக், மாளவிகா, விவேக், ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் இதுகுறித்து சில அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

Seenu
'சீனு படம் படுதோல்வி அடைய காரணம் ராங்கான டைரக்டர். ராங்கான சப்ஜெக்ட். வாசு எங்கிட்ட முதல்லயே சொன்னாரு. நாம ஒரு காமெடி படம் எடுப்போம்னு. ஆனா நான் தான் கேட்கல. இல்ல மலையாளத்துல சிபிமலயில் அருமையான படத்தை எடுத்துருக்காரு.
அதுல வர்ற நெடுமுடி வேணு கேரக்டருக்கு சத்யராஜ், மோகன்லால், மம்முட்டின்னு யாரையாவது கேட்கலாம்னு நான் பாட்டுக்கு உள்ளே இறங்கிட்டேன். அது மாபெரும் தவறுன்னு லேட்டா எனக்கு புரிஞ்சிடுச்சு. 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' மாதிரி ஆயிடுச்சு. அதுல கார்த்திக் நம்மள போட்டு சாகடிச்சிட்டாரு. போதை ஊசி போட்டுக்கிட்டு சூட்டிங்குக்கு ஒழுங்கா வராம... நடந்தது நடந்து போச்சி விடுங்க...' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... இந்தியன் 2ல் அனிருத் பண்ணிய சேட்டை… கமலும், ஷங்கரும் இப்படி கவனிக்காமல் விட்டுட்டாங்களே…!
சீனு படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். டேய் நந்தகுமாரா, குசலாம்பாள், மாதவா சேதுமாதவா, பாடுகிறேன் ஒரு பாட்டு, வணக்கம் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படத்திற்கு முதலில் தம்பிக்கு ஒரு பாட்டு, பூஜை என்று டைட்டில் வைத்தார்களாம். அதற்குப் பிறகு கடைசியாகத் தான் படத்தின் ஹீரோ கேரக்டர் பெயரான சீனுவையே தலைப்பாக வைத்தார்களாம்.