பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..
சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார். ஒரு ஹீரோவாவுக்கு சொல்லப்பட்ட கதையில் வேறு ஹீரோ நடிப்பார். ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமல் நடிப்பார்.
விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடிப்பார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. அதேபோல்தான் ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பும். இப்போதெல்லாம் இயக்குனர்களே வசனங்களை எழுதிவிடுகிறார்கள். ஆனால், 60,70களில் அப்படி இல்லை. வசனம் எழுதுவதற்கென்றே வசனகர்த்தா என ஒருவர் இருப்பார்.
இதையும் படிங்க: கோபத்தில் வாட போடா என பாட்டு எழுதிய கண்ணதாசன்!.. சிவாஜிக்கு அமைந்த ஒரு சூப்பர் ஹிட் பாட்டு!..
சிவாஜி படங்களுக்கு அதிகம் வசனம் எழுதிய ஆருர்தாஸ் என்று சொல்லலாம். அதேபோல், எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன், ரவீந்திரன் என சிலர் இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அதேபோல், சிவாஜி ஹீரோவாக அறிமுகமான பராசக்தி படத்திற்கும் வசனம் எழுதியது அவர்தான்.
பராசக்தியில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது எப்படி சிவாஜிக்கு போராட்டமாக இருந்ததோ கலைஞர் கருணாநிதிக்கும் அப்படித்தான். பராசக்தி திரைப்படம் முதலில் நாடகமாகத்தான் உருவானது. இந்த நாடகத்தை பார்த்த இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு அந்த கதையை சினிமாவாக எடுக்க திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் சிவாஜி நடித்த திரைப்படம்!… நன்றி உணர்ச்சின்னா அது நடிகர் திலகம்தான்!..
நாடகத்திற்கு வசனம் எழுதிய பாவலர் பாலசுந்தரமே திரைக்கதை, வசனம் எழுதுவது என முடிவானது. ஆனால், இயக்குனர்கள் தரப்பில் சொல்லப்பட்ட சில ஆலோசனைகள் அவர் ஏற்கவில்லை. எனவே, திருவாரூர் தங்கராஜ் என்பவர் வந்தார். சில காரணங்களால் அவரும் விலகிவிட பராசக்தி படத்திற்கு 3வதாக வசனம் எழுத வந்தவர்தான் கலைஞர் கருணாநிதி.
பராசக்தி படம்தான் கலைஞர் கருணாநிதியை ஒரு வசனகர்த்தாவாக ரசிகர்களிடம் பிரலமடைய செய்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் அனல் பறக்கும் பகுத்தறிவு வசனங்களை எழுதி தள்ளினார் கலைஞர் கருணாநிதி.