சின்னத்திரையில் ஒருகாலத்தில் முன்னணியில் இருந்த சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு உயிர் கொடுத்ததே இதில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து. இவர் சமீபத்தில் மரணமடைந்தார். இவர் இருந்த வரை சீரியலில் தினமும் புது புது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தன.
பின் இவர் இறந்தபின் கதையை நகர்த்த தெரியாமல் இயக்குனர் அந்த வீட்டு கடைக்குட்டி குழந்தை வரை கதையை எடுத்து சென்றார். பின் ஒரு வழியாக வெள்ளித்திரை நட்சத்திரமான வேல ராமமூர்த்தியை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். இரண்டு நாட்கள் வரை மட்டுமே நடித்த இவர் பின் நாடகத்திற்கு டாடா காட்டிவிட்டு சென்ருவிட்டார் போல.
இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: ஓசியில காசு கொடுத்து கடைசியில பிச்சைக்காரனா மாறிய மனோஜ்..!
கதையின்படி இவரை 7 நாட்கள் சிறையில் அடைத்தாற்போல் இயக்குனர் கொண்டு சென்றுவிட்டார். போனவர் அவரது குடும்ப வக்கீலிடம் கதிரை நான் சொன்ன பிளான் படி நடக்க சொல் என கூறிவிட்டு சென்றுள்ளார். அதை வக்கீலும் கதிரிடம் கூறுகிறார். அதன்படி கதிர் தனது அண்ணன் சொன்ன பிளானை செய்யபோவதாக அவரது மற்றொரு அண்ணனான ஞானத்திடம் கூறுகிறார்.
அதற்கு கரிகாலனோ என்ன பிளான், அப்பத்தாவை போட்டு தள்ளுவதுதானே என கேட்க இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இப்போது ஆதி குணசேகரன் இல்லாமல் கதையை எவ்வாறு நகர்த்த என தெரியாமல் இருக்கும் இயக்குனர் இனி அப்பத்தாவை வைத்து கதையை நகர்த்த திட்டமிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க:அட! என்னமா அவரு சிம்பிள்ளா இருந்தா சீனை போடுவீங்களா..? ரஜினிக்கு நடந்த அவமரியாதை..!
மேலும் இன்னொருபக்கம் ஜனனியின் அப்பா அவளை கண்டபடி திட்டி விட வாயே பேசாத ஷக்தி அப்போது கூட வாயை திறக்காமல்தான் நிற்கிறார். அவருக்கு பதிலாக ஈஸ்வரி ஜனனியின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு இந்த சீரியல் கதைக்கு சம்பந்தமில்லாத பாதையில் பயணிப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…