சல்மான் கான் அவ்ளோ உசுர கொடுத்து நடிச்சா!.. அத யாரு பார்க்குறா.. கத்ரீனா கைஃப் டவல் சீன் தான் செம வைரல்!..

இந்த ஆண்டு ஷாருக்கான் பதான், ஜவான் என அடுத்தடுத்து 1000 கோடி கிளப்பில் இரண்டு படங்களை இறக்கி பாதாளத்தில் கிடந்த பாலிவுட்டையே தூக்கி நிறுத்தி உள்ளார். இந்த ஆண்டு ஹாட்ரிக் அடிப்பார் என பார்த்தால், உஷாராக டன்கி திரைப்படத்தை அடுத்த ஆண்டுக்கு கொண்டு சென்று விட்டு, அந்த இன்னொரு 1000 கோடி வசூலை தனது நண்பர் சல்மான் கான் வசம் ஒப்படைத்துள்ளார்.

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு சல்மான் கான் டிரெய்ன் ஃபைட்டின் போது கேமியொவாக வந்து உதவியது போல சல்மான் கானின் டைகர் 3 படத்தில் ஷாருக்கான் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் செய்த துரோகம்!. குழந்தைகளுக்காக அமைதியா இருக்கேன்!. மனம் உடைந்து பேசிய இமான்!…

தமிழ், இந்தி என பேன் இந்தியா மொழிகளில் அந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மிஸ் ஆகி வந்த சல்மான் கானின் வெறித்தனத்தையும் ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் இயக்குநர் மணிஷ் ஷர்மா இறக்கி உள்ளார்.

இந்த படமும் வழக்கம் போல இந்தியா - பாகிஸ்தான் பஞ்சாயத்து தான் என்பதை டிரெய்லரில் பார்த்தாலே தெரிகிறது. தீவிரவாதிகளை அழிக்க சீக்ரெட் ஏஜென்ட்டான சல்மான் கான் முயற்சி செய்ய அவர்கள் இவரையே தேச துரோகியாக மாற்றி இவரது குடும்பத்தையும் நாட்டையும் ஒரே நேரத்தில் அழிக்க முற்பட எதை காப்பாற்றுவார் என்கிற பழக்கப்பட்ட கதைக்களத்துடன் தான் கதை இருந்தாலும், டிரெய்லர் சும்மா தீபாவளி பட்டாசாக அனல் பறக்கிறது.

இதையும் படிங்க: மோசமாக எழுதிய பத்திரிக்கையாளர்… சரியான நேரத்துல அஜித் கொடுத்த பதிலடி என்னனு தெரியுமா?…

ஆனால், சல்மான் கான் அப்படி டிரெய்லர் முழுக்க வல்லரசு விஜயகாந்த் போல பறந்து பறந்து சண்டை போட்டாலும், பாவி பசங்க கடைசியில் சொருகிய அந்த பிட்டு சீனை தான் ரிப்பீட் மோடில் போட்டு நிறுத்தி பார்த்து, ஜூம் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

டிரெய்லர் இறுதியில் நடிகை கத்ரீனா கைஃப் வில்லியுடன் வெறும் டவல் மட்டும் கட்டிக் கொண்டு அதையும் கழட்டி சண்டை போடுவது போன்ற காட்சிக்காகவே வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை தியேட்டரில் கொண்டாடுவார்கள் என தெரிகிறது.

ஷாருக்கான் படத்திற்கு தீபிகா படுகோன் காட்டு காட்டு என காட்டிய நிலையில், சல்மான் கானுக்காக கத்ரீனா கைஃப் கழட்டியே விட்டுள்ளார்.

 

Related Articles

Next Story