சிவகார்த்திகேயன் செய்த துரோகம்!. குழந்தைகளுக்காக அமைதியா இருக்கேன்!. மனம் உடைந்து பேசிய இமான்!...

Sivakarthikeyan: சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக இசைக்கருவிகளை கற்றுக்கொண்டு சர்ச், நட்சத்திர ஹோட்டல் என பல இடங்களிலும் வாசித்து வந்த டி. இமான் பல போராட்டங்களுக்கு பின் சினிமாவில் இசையமைப்பாளராக மாறினார். விஜய் நடித்த தமிழன் படத்தில் இவரின் இசை கவனிக்கப்பட்டது. அதன்பின் விஜயின் குட் புக்கிலும் இருந்தார்.

பல வருடங்கள் கழித்து விஜய் நடித்த ஜில்லா படத்திலும் இமான் இசையமைத்திருந்தார். மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கும்கி, கயல், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பல மெலடிகளை கொடுத்தவர் இவர். அதேபோல், பல குத்துப்பாடல்களையும் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் இவர்.

இதையும் படிங்க: நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்திற்கு இசையமைத்தவர் இவர்தான். அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களுக்கும் இமான் இசையமைத்தார். இருவரும் இணைந்த கூட்டணி ஹிட் பாடல்களை கொடுத்தது. ஆனால், கடந்த பல வருடங்களாகவே இருவரும் பேசிக்கொள்வதில்லை.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இமான் ‘சிவகார்த்திகேயன் வளர்ச்சியை நான் அறிவேன். அவர் படங்களில் என் பாடல்கள் அனைத்தும் ஹிட்தான். ஆனால், அவர் எனக்கு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன். அது என் சொந்த விஷயம் என்பதால் வெளியே சொல்ல முடியாது. வெளியே சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

இதையும் படிங்க: இந்த ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டா சோலி முடிஞ்சது!.. ஓவர் ஆட்டம் போடும் சிவகார்த்திகேயன்..

அவரை மன்னித்தாலும் கூட அவர் எனக்கு செய்த துரோகத்தை மறக்க மாட்டேன். நான் நெருக்கமாக பழகிய சிலரில் அவரும் ஒருவர். அவரின் குடும்பத்தினருடன் நன்றாக பழகி இருக்கிறேன். அவர் எனக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என் குழந்தைகள் என்னிடம் வந்து ‘என்னதான் நடந்தது?’ என கேட்டால் அவர்களிடம் மட்டும் அதை சொல்வேன்’ என இமான் மனமுடைந்து பேசினார்.

மேலும், இந்த ஜென்மத்தில் அவரின் படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன். அது எப்போதும் நடக்காது. அவரை மன்னித்தாலும் கூட அவர் செய்த விஷயத்தை மறக்க முடியாது. எனவே, அவரோடு இணைந்து பயணிப்பது என்பது சாத்தியமில்லை’ என இமான் கூறினார். இமானின் இந்த பேட்டி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஆரம்பிச்சி வச்சத நான் முடிச்சிருக்கேன்!.. போறபோக்குல அள்ளிவிடும் சிவகார்த்திகேயன்!..

Related Articles
Next Story
Share it