பீஸ்ட் படத்தில் கவினின் கெட்டப் என்ன.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!

by Manikandan |
பீஸ்ட் படத்தில் கவினின் கெட்டப் என்ன.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!
X

தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியாகி வரும் திரைப்படம் பீஸ்ட். ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இன்னும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. ஏப்ரல் 2022 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்பட பூஜையின் போது பிக் பாஸ் கவின் அதில் கலந்துகொண்டார்.

இதையும் படியுங்களேன் - பணம் மட்டும் போதாது.! அறிவும் வேண்டும்.! கத்தி தயாரிப்பாளரின் மோசமான நிலை.!

உடனே ரசிகர்கள் அவரும் படத்தில் இருக்கிறார் என கூறிவந்தனர். இது பற்றி ஆராய்ந்த போது, உண்மையில் பீஸ்ட் படத்தில் அவர் இருந்துள்ளார் ஆனால், நடிகராக இல்லை. படத்தின் கதை விவாதத்தில் நெல்சன் உடன் பயணித்துள்ளார் கவின். பீஸ்ட் இறுதி கட்ட எழுத்து பணிகள் முடியும் வரை இருந்துள்ளார்.

அடுத்ததாக பீஸ்ட் படப்பிடிப்பு தொடங்கும் போது, ஆகாஷ் வாணி வெப் சீரிஸ் போன்ற மற்ற பட ஷூட்டிங் இருந்ததால், அதில் கலந்துகொள்ள கவின் சென்றுவிட்டாராம். அதனால், பீஸ்ட் திரைப்படத்தில் கவின் நடிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. டாக்டர் படத்தில் கூட முழு நேர உதவி இயக்குனராக நெல்சன் உடன் கவின் பயணித்துள்ளார்.

Next Story