More
Categories: Cinema History Cinema News latest news

கலைஞர் வரிகளை பாட மறுத்த கே.பி.சுந்தராம்பாள்!… அவருக்காக தனது கொள்கையையே மாற்றிய கருணாநிதி…

K.B.Sundharambal: பழங்கால தமிழ் சினிமாவில் தனது தெய்வீகமான குரலின் மூலம் மக்களை தன்வசம் இழுத்தவர் கே.பி.சுந்தராம்பாள். பழம் நீயப்பா… ஞான பழம் நீயப்பா.. என தெய்வீக மணத்தில் பாடிய இவரது பாடல்களை இன்று வரையிலும் மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஒளவை பாட்டி என நினைத்தாலே நமக்கு நினைவுக்கு வருவது இவர்தான். அந்த அளவுக்கு தனது நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார். அந்த காலத்திலேயே மிக அதிக அளவு சம்பளம் வாங்கியவரும் கூட. இவர் சினிமா பாடல்களை தாண்டி தனிப்பட்ட முறையிலும் பல பக்தி பாடல்களை பாடியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:பல அவமானங்களை கண்ட விஜயகாந்துக்கு மருந்தாக வந்த வாய்ப்பு… கிடைத்தது எப்படின்னு தெரியுமா?

இவர் இவரை போலவே தனது பாடல்களின் மூலம் பிரபலமடைந்தவரான எஸ்.ஜி.கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. கிட்டப்பா தனது இளம் வயதிலேயே இறந்துவிட அன்றிலிருந்து வெள்ளை புடவையை கட்டி கொண்டு கடவுளே கதி என வாழ்ந்து வந்தார் சுந்தராம்பாள்.

பின்னர் இவருக்கு ஆர்.சுதர்சனம் இயக்கத்தில் வெளியான பூம்புகார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அதற்கு இவர் சம்பளமான 1 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.

இதையும் வாசிங்க:பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ஒன்னுமே தோணல.. சேட்டையை ஆரம்பிச்ச இளையராஜா…

கருணாநிதியின் படம் என்றவுடனேயே சுந்தராம்பாளுக்கு சிறிய தயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இவரோ கடவும் நம்பிக்கை அதிகம் கொண்டவர். கருணாநிதியின் படத்தில் முற்போக்கு சிந்தனை இருக்கும் என்பதால் முதலில் தயங்கியுள்ளார். பின்னர் ஒரு வழியாய் சம்மதித்து விட்டாராம்.அப்படத்திற்கு கலைஞர் கோவலனை கொன்றவுடன் அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது… நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது… என்ற வரிகளுடன் பாடம் எழுதினாராம்.

அதை பார்த்த சுந்தராம்பாளுக்கு கடும் கோபம் ஏற்பட்டதாம். அதனால் அவரது வரிகளை பாடமாட்டேன் என கூறிவிட்டாராம்.ஆனால் சுந்தராம்பாளை விட மனமில்லாத கலைஞர் அவருக்காக அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது… நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது… என மாற்றினாராம். கே.பி.சுந்தராம்பாளுக்காக தனது கொள்கையையே சமரசம் செய்து கொண்டாராம் கலைஞர் கருணாநிதி.

இதையும் வாசிங்க:ஹீரோவ மட்டும்தான் கவனிப்பீங்களா?… மேக்கப் மேனிடம் ரஜினி சொன்ன அந்த விஷயம்…

Published by
amutha raja