ஹீரோயின்களை கட்டிய புருஷர்களுக்கு செம அடி..! லைக்ஸ் குவிக்கும் நடிகர் அசோக் செல்வன்..!

Ashok Selvan: நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் போர்த்தொழில் படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. தற்போது அவர் நடிப்பில் சபாநாயகன் திரைப்படம் ரிலீஸாகி இருக்கிறது. பஞ்சாயத்து இப்போ அது இல்லை. வேற ஒன்னு என்பது தான் இதில் சுவாரஸ்யமே.
அசோக் செல்வனுக்கு சமீபத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர் நடிகையும், அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார். இருவருமே திருமணம் ஆகும் வரை தாங்கள் காதலர்கள் என்பதை எங்குமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனாலே இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்தது.
இதையும் படிங்க: தளபதி69க்கு விஜய் வைத்திருக்கும் ஐடியா இதுதான்… வேற இயக்குனருக்கு வாய்ப்பே இல்ல!
இந்நிலையில் கீர்த்தி நடிப்பில் கண்ணகி திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. சபாநாயகன் திரைப்படமும் அதே நாளில் தான் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. பயில்வான் ரங்கநாதன் கூட ஒரு நிகழ்ச்சியில் இரண்டு பேரும் வீட்டில் சண்டை போடுகிறீர்கள்? இப்போ ரிலீஸிலுமா எனப் பேசி இருந்தார்.
அதற்கு கீர்த்தி காட்டமாகவே நாங்க சண்டை போட்டதை நீங்க பார்த்தீங்களா? என பதிலடி கொடுத்தார். அவர் ஒரு பேட்டியில் கலந்து கொள்ள ஆங்கரும் திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து நடிப்பீங்களா என காலம் காலமாக கேட்கும் கேள்வியை கீர்த்தி முன் வைக்க அவரும் இதை என் கணவரை பார்த்து கேட்பீங்களா என கடுப்பாகி பதில் கூறினார்.
இதையும் படிங்க: குருவிடமே சீன் போட்ட ரஜினிகாந்த்.. ஆனா இந்த பிரபலத்துக்கு மட்டும் இதை செய்தாராம்..!
இந்த நிலையில் தான் அசோக் செல்வனிடமும் கீர்த்திக்காக தான் இந்த பட ரிலீஸை தள்ளி வச்சீங்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அசோக் செல்வன் மழைக்காக சென்சார் வாங்கவில்லை. அதனால் தான் தள்ளிப்போனது என்றார். இதை தொடர்ந்து கீர்த்தி சொன்ன பதில் குறித்து அசோக் செல்வனின் கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அசோக், நானும் பார்த்தேன். நான் கீர்த்தியின் ஓனர் இல்லை. அவங்க பார்ட்னர். நாங்க இரண்டு பேருமே இரண்டு தனிப்பட்ட மனிதர்கள். அவங்க ஆசையை நான் தடுக்க மாட்டேன். அதை அவங்க பிடிப்பது வரை செஞ்சிக்கிட்டே இருக்கது தான் என் கடமை என்றும் குறிப்பிட்டார். அடுத்து கீர்த்தியும், அசோக் செல்வனும் இணைந்து நடித்து இருக்கும் ப்ளூஸ்டார் திரைப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.