More
Categories: latest news

மேக்கப் இல்லாம இப்படித்தான் இருப்பாரா?.. ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்….

தென்னிந்திய சினிமாவில் இன்று மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை மேனகாவின் மகளாவார். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

மிக குறுகிய காலத்திலே இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய்யுடன் பைரவா, சர்க்கார், தனுஷுடன் தொடரை, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஆரம்பமே அலைக்கழிப்பா?…விருமனுக்கு வேட்டு வைத்த பிரகாஷ்ராஜ்!… அப்செட்டில் படக்குழு…

தமிழைப்போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அங்கும் முன்னணி நடிகையாகிவிட்டார். தெலுங்கில் முக்கியமாக, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் நடித்ததன்மூலம் தேசிய விருதைப்பெற்றார்.

இதன்பின் இவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. தற்போது இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க:நீச்சல் உடையில் முரட்டுக்கவர்ச்சி…. அம்சமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…..

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அஜித் நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் கீர்த்தி.

keerthi suresh

இந்நிலையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் சிறுவயது போட்டோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றது. அதில் துளிகூட மேக்கப் இல்லாமல் சற்று கறுப்பாகவே காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts