Connect with us
kingkong shankar

Cinema News

மனைவியோட ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில் கிங்காங்… வாழ்க்கையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…

KingKong Shankar: கிங்காங் ஷங்கர் தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர். தனது உயரத்தின் மூலமே இவர் பிரபலமானவர். என்னதான் தனது உயரம் குறைவாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையை எதிர்கொள்கிறார். இவர் தான் முதல் வகுப்பில் படிக்கும்போதே தனது உயரத்தை பற்றிய வித்தியாசத்தினை உணர்ந்துள்ளார்.

மற்ற மாணவர்களை விட தான் உயரத்தில் குறைந்திருப்பதாக எண்ணியுள்ளார். பின் அதையே தனது பலமாக எடுத்து கொண்டாராம். இவரை நாம் வடிவேலுவுடனான காமெடிகளில் அதிக அளவு பார்க்க முடியும். மேலும் இவர் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:இந்திய சினிமாவே இன்னைக்கு விஜய்யை திரும்பி பார்க்குது!.. லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் செம ஸ்பீச்!..

ஊரை தெரிஞ்சிகிட்டேன் திரைப்படம்தான் இவருக்கு முதல் படம். மேலும் அதிசய பிறவி, பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல திரைப்படங்களின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். வடிவேலுவுடன் சுறா, தெனாலிராமன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின் தனது சொந்த முயற்சியினால் தந்து இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். பின் இவரும் தனது அப்பா வழி சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டாராம். திருமணம் செய்யும் முன்பே அப்பெண்ணிடம் பல முறை தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என கேட்டாராம். பத்திரிக்கை அடிப்பதற்கு முன்பு கூட ஒரு முறை கேட்டுவிட்டுதான் பத்திரைக்கை அடிக்க தொடங்கினாராம். அப்பெண்ணும் இவரை பல திரைப்படங்களில் பார்த்துள்ளதாகவும் மேலும் அவரை மிகவும் பிடித்துதான் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:கைய குடுங்க சகல!.. ரஜினியை மேடையில் கலாய்த்த ரத்னகுமார்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்டை பாருங்க!

இவ்வாறு திருமணம் செய்து கொண்ட இவர் தனது மனைவிக்காக தான் இதுவரை ஒரு விஷயம் மட்டும் செய்யவில்லை என கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். தன்னால் தனது மனைவியை ஒரு பைக்கில் கூட அழைத்து செல்ல முடியவில்லை என கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தை அவரை பெண் பார்க்க சென்றபோதே தனது மனைவியிடம் கூறிவிட்டாராம். அவர் மனைவியும் அதனால் பரவாயில்லை என கூறிவிட்டாராம்.

ஆனால் இப்படி மன தைரியத்துடன் வாழும் கிங்காங் சங்கர் சினிமாவில் பல இன்னல்களையும் சந்தித்து வருகிறார். பல இயக்குனர்கள் இவரை தனது படங்களில் நடிக்க வைத்து அதற்கான சம்பளத்தை கொடுக்காமல் ஏமற்றியுள்ளனர். ஆனால் அந்த விஷயங்கள் எதையுமே அவர் பெரிதாக வெளிகாட்டிக்கவில்லை. மேலும் பல ஹோட்டல்களுக்கு செல்லும் போது பில் கொடுக்கும் இடத்தில் இவர் உயரம் குறைவாக இருப்பதால் இவரது கையை உயர்த்தினால் மட்டுமே இவர் இருக்கும் இடம் தெரியுமாம். அதனை நினைத்து பல முறை வருத்தப்பட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:அப்பா சட்டைக்கும்!.. அப்பா சேருக்கும் பையன் ஆசைப்படுறது தப்பில்லையே!.. விஜய் சொன்ன அந்த அப்பா யாரு?..

google news
Continue Reading

More in Cinema News

To Top