கோலிவுட்டில் 14 வருடம் கழித்து நடக்கும் ஆச்சரியம்… டாப் ஸ்டார்கள் செய்யும் செம விஷயம்…
Kollywood: தமிழ் சினிமாவில் இந்த வாரம் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வசூல் வேட்டையே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த வருடத்தின் இரண்டாம் பகுதி ரிலீஸுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.
பொதுவாக இப்போது இருக்கும் நடிகர்களின் திரைப்படங்கள் வருடத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டோ தான் ரிலீஸாக இருக்கிறது. ஆனால் இதற்கு முந்தைய காலங்களில் முன்னணி ஹீரோக்கள் வருடத்துக்கு பல படங்களில் நடித்திருப்பார்கள். ஆனால் அந்த முறை இப்போது மாறிவிட்டது.
இதையும் படிங்க: அஜித்கிட்ட இருந்த அந்த ஒரு விஷயம்! ‘பில்லா’ல அதான் ஒர்க் அவுட் ஆச்சு.. இப்படி வேற இருக்கா?
ஒரே வருடத்தில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாவதே அபூர்வமான கதையாக இருக்கிறது. அந்த வகையில் இதற்கு முன்னர் 2010ம் ஆண்டு தான் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசனின் படங்கள் திரையரங்கில் ரிலீஸாகியது. விஜய் நடிப்பில் சுறா, அஜித்தின் அசல், கமல்ஹாசனின் மன்மதன் அம்பு பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.
ஆனால் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. வசூல் வேட்டை நடத்தியது. இந்த வருடத்தினை தொடர்ந்து நால்வரின் திரைப்படமும் ஒரே வருடத்தில் ரிலீஸாகமலே இருந்தது. கடந்த வருடம் கூட கமல்ஹாசனின் படம் ரிலீஸாகாமல் மற்ற மூவரின் படமும் ரிலீஸாகி நல்ல வசூல் செய்தது.
இதையும் படிங்க: பக்கா கேடியான ரோகிணி… அடே எங்களுக்கே காண்டாகுது.. வில்லிக்கு இவ்வளோ சீனா?
இந்நிலையில் 14 வருடத்துக்கு பின்னர் நால்வரின் திரைப்படமும் ஒரே வருடத்தில் ரிலீஸாக இருக்கிறது. கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன்2, ரஜினிகாந்தின் வேட்டையன், விஜயின் கோட், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படங்கள் இந்த வருட ரிலீஸுக்கு பிளான் செய்யப்பட்டுள்ளது. 14 வருடம் கழித்து நடக்கும் இந்த மேஜிக்கால் யார் இந்த வருட வெற்றியை பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.