வைரல் இயக்குனருடன் ஜாலி பண்ணும் வாரிசு நடிகை!… இப்போ பப்ளிக்கா வேற ஊர் சுத்துறாங்களாம்!...

by Akhilan |   ( Updated:2024-03-23 13:27:13  )
வைரல் இயக்குனருடன் ஜாலி பண்ணும் வாரிசு நடிகை!… இப்போ பப்ளிக்கா வேற ஊர் சுத்துறாங்களாம்!...
X

Gossip: நடிப்பிலும், இசையமைப்பிலும் ஆர்வம் இருக்கும் வாரிசு நடிகை விரைவில் ஒரு ஆல்பம் பாடலை ரிலீஸ் பண்ண இருக்கிறார். அதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில் தற்போது அம்மணி பழைய காதலரை கழற்றி விட்டுவிட்டாராம்.

ஆஸ்கர் அப்பா எழுத மகள் இசையமைக்க வைரல் இயக்குனருடன் நடிக்க இருக்கும் ஆல்பம் தான் தற்போதைய கோலிவுட்டின் பேசும் பொருளாகி இருக்கிறது. 30 நொடி வீடியோவை பார்த்த ரசிகர்கள் அரண்டு விட்டனர். காரணம் இதில் நடித்து இருக்கும் இயக்குனர் படங்களில் இதுவரை ரொமான்ஸ் காட்சிகளே இல்லையாம்.

இதையும் படிங்க: பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…

அதிலும், சில படங்களில் ஹீரோயின் இல்லாமலும், சில படத்தில் ஹீரோயின் தலையை வெட்டும் சீன் வரை வைத்து அலற விட்டு இருக்கிறார். ஆனால் தற்போது அம்மணியுடன் ஓவர் ரொமாண்டிக்கில் நடிப்பதை பார்த்த ரசிகர்களுக்கே ஆச்சரியமாகிவிட்டதாம்.

இதற்கெல்லாம் வாரிசு நடிகையின் ட்ரெயினிங் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் விரைவில் வெளியாக இருக்கும் அந்த ஆல்பத்துக்கு ப்ரோமோஷன் தேடும் வகையில் ஐபிஎல்லில் ஜோடியாக வந்ததையும் பார்க்க முடிகிறது. அந்த வைரல் இயக்குனர் ஆஸ்கர் அப்பாவின் தீவிர ரசிகர் என்பது ஊரறிந்த விஷயம்.

இதையும் படிங்க: இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..

அதுக்காக அம்மணிக்கு நடித்து கொடுக்க போய் இப்போ வீட்டில் பிரச்னை தொடங்கிவிட்டதாம். அப்போவே மனைவி நடிப்பெல்லாம் வேண்டாம் எனக் கூறிக்கொண்டே இருந்தாராம். ஆனால் கேட்காமல் போய் இப்போ கலாய் ஒரு பக்கம், வீட்டில் சண்டை ஒரு பக்கம் என இயக்குனர் நிலைமை அல்லோலப்பட்டு இருக்கிறதாம்..

Next Story