இரண்டு மாதம் கடந்தும் கல்லா கட்டாத கோலிவுட்… பெரிய அளவில் சறுக்கலை சந்திக்கும் அதிர்ச்சி பின்னணி…

by Akhilan |
இரண்டு மாதம் கடந்தும் கல்லா கட்டாத கோலிவுட்… பெரிய அளவில் சறுக்கலை சந்திக்கும் அதிர்ச்சி பின்னணி…
X

Kollywood: தமிழ் சினிமாவின் அமோக வளர்ச்சி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து ஆட்டம் கண்டு இருக்கும் நிலையில் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வசூல் கூட இல்லாமல் போன நிலையில் தயாரிப்பாளர்கள் நிலை தான் கவலைக்கிடமாகி இருக்கிறது.

2023ல் தமிழ் சினிமாவில் நிறைய முன்னணி நட்சத்திரங்களின் திரைப்பட ரிலீஸால் வியாபாரமே 3500 கோடி வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும் பொங்கல் ரிலீஸாக விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு என இரண்டுமே மோதிக்கொண்டது.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

அதை தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜயின் லியோ என பெரிய அளவில் வசூல் குவிந்தது. அதனால் 2024 அமோகமாக ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு ஆரம்பமே மிகப்பெரிய அடியாக அமைந்தது.

பொங்கல் ரிலீஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைக்கு வந்தது. அதனுடன் விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜயின் மிசன் ஆகிய நான்கு படங்கள் ரிலீஸானது. ஆனால் அதில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த கேப்டன் மில்லரே சில கோடிகள் நஷ்டத்தினை தான் கொடுத்தது.

அதனால் மற்ற மூன்று படங்களுமே பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. தொடர்ந்து வார இறுதியில் படங்கள் ரிலீஸானால் கூட கணிசமான வசூலை பெற முடியவே இல்லை. ரி ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை கூட சில புதிய படங்களுக்கு கிடைக்கவே இல்லை.

இதையும் படிங்க: இப்படி ஒரு டைட்டில் வச்சதால எனக்கு நேர்ந்த கொடுமை! அர்ஜூன் சொன்ன அந்தப் படம் எதுனு தெரியுமா?

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் பெரிய ஏமாற்றமாக நிறைய ஷோக்கள் கேன்சல் ஆகும் நிலைக்கு வந்து இருக்கிறது. ரஜினியால் கூட பெரிய அளவில் வசூல் கிடைக்கவே இல்லை.

கிட்டத்தட்ட 44 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இதுவரை ஒரு படம் கூட பெரிய ஹிட்டையோ, நல்ல வசூலையோ பெறவில்லை என்பதே அதிர்ச்சிகரமான செய்தியாகி இருக்கிறது. இந்த வாரம் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சைரன் ரிலீஸாக இருக்கிறது. புரோமோஷன் ஜரூர் வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அகிலன், இறைவன் என அட்டர் ப்ளாப் படங்களை கொடுத்த ரவி இதில் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மூணு பக்க அறிக்கை.. விளங்காத விஷால்! விஜய்க்காக ஏன் இவ்வளவு மெனக்கிடல்?

Next Story